Categories: உலகம்

இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரனில் விக்ரமசிங்கே

கொழும்பு, டிச.16 இலங்கையில் அய்க்கிய தேசிய கட்சி சார்பில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறீசேனாவுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதனால்இலங்கை அரசி யலில்வரலாறுகாணாதகுழப் பம்நிலவியது.இதனால் சிறீசேனாவுக்குநெருக்கடிஏற் பட்டதை தொடர்ந்து நாடாளு மன்றத்தை அதிரடியாக கலைத்து விட்டு தேர்தலை அறிவித்தார்.
இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.இந்த வழக்கில் கடந்த 13 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது சட்ட விரோதம் என அறி வித்தது. இதைப்போல ராஜ பக்சே மற்றும் அவரது தலை மையிலான அமைச்சரவை செயல்படுவதற்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவையும் நேற்றுமுன்தினம் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.இந்த 2 உத்தரவுகளையும் தொடர்ந்து அதிபர் சிறிசேனா மற்றும் ராஜபக்சேவுக்கு நெருக் கடி ஏற்பட்டது. இந்நிலையில், ராஜபக்சே, பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்தார். அதன்படி நேற்று அவர் தனது பதவியிலிருந்து விலகினார்.ராஜபக்சேபதவிவிலகி யதைதொடர்ந்துபுதிய பிரதம ராக ரனில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

1 year ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

1 year ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

1 year ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

1 year ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

1 year ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

1 year ago