புகை மண்டலமாக காட்சியளிக்கும் ஹவாய் தீவு : 24 மணிநேரத்தில் 500 முறை நிலநடுக்கம்!

ஹொனலுலு: ஹவாய் தீவில் கடந்த 24 மணிநேரத்தில் கிலாயூ எரிமலையை சுற்றிய 5 கி.மீ பகுதியில் 500 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹவாய் தீவில் பல வெடிக்கக்கூடிய எரிமலைகள் உள்ளன. மத்திய பசுபிக் கடல் அருகே இருக்கும் இந்த தீவில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கிலாயூ என்ற எரிமலை வெடித்து நெருப்பு குழம்புகளை உமிழ்ந்து வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் எரிமலை குழம்பு பரவி இருக்கிறது. இதனையடுத்து அங்கு வசித்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிலாயூ எரிமலை மீண்டும் வெடித்துள்ளது. இதன் காரணமாக தொடர் நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் எரிமலையை சுற்றிய 5 கி.மீ பகுதியில் 500 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக 8000 அடி உயரத்திற்கு தூசுகளும், புழுதிகளும் எழுந்துள்ளதால், எரிமலையை சுற்றியுள்ள 15 கிலோ மீட்டர் பகுதி வரை புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் ஹவாய் தீவை சுற்றி உள்ள மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்த 8000 கிலோ மீட்டர் உயர புழுதியை சாட்டிலைட் படம் பிடித்து வெளியிட்டுள்ளது. கிலாயூ எரிமலை கடந்த ஒரு மாதத்தில் 7 முறை வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago