மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய பயங்கரவாதி ஹபீஸ் சயீதை வேறு நாட்டுக்கு அனுப்புமாறு பாகிஸ்தானிடம் ஆலோசனை கூறியதாக வெளியான தகவல்களை சீனா மறுத்துள்ளது. சீனாவில் கடந்த மாதம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் இடையே பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸியை சந்தித்துப் பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங், ஹபீஸ் சயீதை மேற்காசிய நாடு ஒன்றுக்கு அனுப்புவதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு கேட்டுக் கொண்டார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த செய்தியை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை; இவ்வாறு செய்திகள் வெளியாவது அதிர்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் அமெரிக்காவைச் சேர்ந்த 6 பேர் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீது, தற்போது பாகிஸ்தானில் உள்ளார். அவரது அமைப்பை, பயங்கரவாத அமைப்பாக, அமெரிக்க அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு அறிவித்தது. அவரது தலைக்கு 1 கோடி டாலர் வெகுமதி அறிவித்துள்ளது. ஹபீஸ் சயீது மற்றும் அவரது பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில்தான், அவரை வேறு நாட்டுக்கு அனுப்புமாறு சீனா ஆலோசனை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…