ஸ்பார்ட்லி: தென் சீனக் கடல் ஸ்பார்ட்லி தீவு பகுதியில் போர்க்கப்பல்களையும், ஏவுகணைகளையும் சீனா குவித்து வருகிறது.தென் சீனக் கடல் பகுதி எரிசக்தி வளம், மீன்வளம், மற்றும் முக்கிய கடல் வழிப் பாதையாக திகழ்கிறது. தென் சீனக் கடல், கிழக்கு சீன கடல் பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. குறிப்பாக, தென்சீனக் கடல் பகுதி தங்களுக்கே உரிமையானது என்பது சீனாவின் வாதம்.ஆனால், வியட்நாம், பிலிப்பின்ஸ், மலேசியா, புரூணே மற்றும் தைவான் ஆகிய நாடுகள் இக்கடல்பகுதியில் தங்களுக்கும் உரிமையுள்ளதாக கூறி வருகின்றன. இந்நிலையில், சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா ஆயுதங்களை குவித்து வருகிறது.ஒரு மாதத்திற்கும் மேலாகவே ஏவுகணை கப்பல்கள் ஃபியரி கிராஸ் ரீஃப், சுபி ரீஃப், மிச்சிப் ரீஃப் ஆகிய தீவுகளுக்கு சீன கப்பல்கள், ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதில், ஏவுகணைகளையும்,நிலை நிறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா எதிர்ப்புதென்சீனக் கடல் சர்வதேச கடல் பகுதி, அங்கு பல நாடுகளின் கப்பல்கள் சுதந்திரமாக சென்று வர உரிமை உள்ளது என அமெரிக்கா தெரிவித்து வருகிறது. அமெரிக்க கப்பல்களும் அந்த வழியாகத்தான் சென்று வருகின்றன. எனவே சீனாவின் ஆயுதக்குவிப்பிற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. ஆயுதங்களை திரும்பப்பெறாவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது.ஆனால் தென் சீனக் கடல் பகுதி தங்களுக்கே சொந்தம் என சீன வெளியுறவுத்துறைத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறியுள்ளார். அவர் கூறியது: ஸ்பார்ட்லி தீவுகள் என்றழைக்கப்படும் நன்ஷா பகுதி மற்றும் அதனைசுற்றியுள்ள தீவுகள் அனைத்தும் சீனாவுக்கு சொந்தமானவை. இப்பகுதியில் எங்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை நிலைநாட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது எங்களின் உரிமை. எனவே, இதனை யாரும் கேள்வி கேட்க முடியாது, என்றார் அவர்.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…