கொழும்பு: இந்திய தொழிலதிபரிடமிருந்து ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை லஞ்சமாகப் பெற்ற இலங்கை அதிபர் சிறிசேனாவின் தலைமை உதவியாளர் ஐ.எச்.கே.மகாணாமா, மரவளர்ச்சி ஆணைய தலைவர் பியதசா திசநாயகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இலங்கை திரிகோணமலையில் கந்தேல் சர்க்கரை ஆலை உள்ளது. 25 ஆண்டுகளாக இந்த ஆலை இயங்கவில்லை. இதை மீண்டும் இயங்கச் செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை ஏற்று நடத்த இந்திய தொழிலதிபர் ஒருவர் முன்வந்துள்ளார்.ஆனால் அவருக்கு ஆலையை தருவதற்கு அதிபர் சிறிசேனாவின் முதன்மை உதவியாளர் ஐ.எச்.கே.மகாணாமா 540 மில்லியன் இலங்கை ரூபாய்களை லஞ்சமாகக் கேட்டுள்ளார். பேச்சுவார்த்தை மூலம் 100 மில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலதிபர் இலங்கையின் சி.பி.ஐ.யான லஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணையத்திடம் புகார் அளித்தார்.லஞ்சப்பணத்தில் முதல் தவணையாக 20 மில்லியன் ரூபாய்கள் கொழும்பு தாஜ் சமுத்ராவின் கார் பார்க்கில் வைத்து கைமாறியுள்ளது. இதையடுத்து விசாரணை ஆணைய அதிகாரிகள் மகாணாமாவை கைது செய்தனர். லஞ்சம் பெற உதவியதாக அரசு மர வளர்ச்சி வாரிய தலைவர் பியதசா திசநாயகவும் கைது செய்யப்பட்டுள்ளார்.இருவரையும் பதவியில் இருந்து நீக்கி சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.லஞ்சம் கொடுத்த தொழிலதிபர் யார் என்பதை விசாரணை ஆணையம் தெரிவிக்க மறுத்துவிட்டது.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…