Categories
உலகம்

சிவன் வேடத்தில் இம்ரான் : ‘பேஸ்புக்’ பதிவால் சர்ச்சை

இஸ்லாமாபாத்: பாக்., முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக் – இ – இஸ்லாம் கட்சித் தலைவருமான, இம்ரான் கான், சிவன் வேடமணிந்ததைப் போல், ‘பேஸ்புக்’கில் வெளியான புகைப்படம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பாக்., கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர், இம்ரான் கான், 65, தெஹ்ரீக் – இ – இஸ்லாம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். எம்.பி.,யாக உள்ள அவர், அரசுக்கு எதிரான பல போராட்டங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில், ஹிந்து கடவுளான சிவன் வேடத்தில், இம்ரான் கான் தோன்றுவது போல், சித்தரிக்கப்பட்ட படம், பேஸ்புக் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. ஹிந்து கடவுளின் உருவத்தில், ஒரு இஸ்லாமியரின் முகம் சித்தரிக்கப்பட்டுள்ளதற்கு, பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது, பாக்., பார்லிமென்ட்டிலும் விவாதத்தை ஏற்படுத்தியது.மக்கள் மத்தியில், இம்ரான் கானின் செல்வாக்கை குறைக்கவே, ஆளுங்கட்சியினர் இதுபோன்ற திட்டமிட்ட சதியில் ஈடுபட்டுள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த செயலுக்கு, அந்நாட்டில் வசிக்கும் ஹிந்துக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply