Categories: உலகம்

“நேட்டோ – அமெரிக்க உறவு உறுதியாக உள்ளது’

நேட்டோ – அமெரிக்க உறவு உறுதியாக உள்ளது என்றும், அந்த அமைப்பின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது என்றும் அந்நாட்டு துணை அதிபர் மைக் பென்ஸ் கூறினார். ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்று வரும் பாதுகாப்பு விவகார மாநாட்டில் சனிக்கிழமை பேசிய மைக் பென்ஸ் இவ்வாறு கூறினார். அவரது உரையில் மேலும் கூறியதாவது: நேட்டோ அமைப்பு தொடர்பாக அமெரிக்காவுக்கு உள்ள பொறுப்பு, அந்த அமைப்பின் மீது அமெரிக்காவுக்கு உள்ள ஆழ்ந்த பற்று மீது யாருக்கும் எந்த சந்தேகமும் எழத் தேவையில்லை. மியூனிக்கில் நடைபெறும் இந்த சர்வதேச பாதுகாப்பு விவகார மாநாட்டில் கலந்து கொள்ள இங்கே என்னை அனுப்பி வைத்ததே அமெரிக்க அதிபர் டிரம்ப்தான்.
நேட்டோ மீது அதிபருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. நேட்டோவுடன் அமெரிக்காவின் உறவு உறுதியாக உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார் மைக் பென்ஸ். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சோவியத் யூனியனின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள மேற்கத்திய நாடுகள் உருவாக்கிய கூட்டமைப்பான நேட்டோ (வடக்கு அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பு) தற்காலத்துக்கு ஒவ்வாத வகையில் செயல்படுகிறது என்று டிரம்ப் கூறி வருகிறார். மேலும், அந்த அமைப்புக்காக அமெரிக்கா பெரும் தொகையைச் செலவிட்டு வருவதாகவும், உறுப்பு நாடுகள் உரிய நிதி அளிப்பதில்லை என்றும் டிரம்ப் அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போதும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் புகார் கூறினார். அமெரிக்காவின் பாதுகாப்பு தேவைப்படுகிறவர்கள் அதற்காக கூடுதல் நிதி அளிக்க வேண்டும் என்று அவர் கூறுவதும் உறுப்பு நாடுகளைக் கவலை அடையச் செய்துள்ளது. நேட்டோவில் அவநம்பிக்கை தெரிவித்த டிரம்ப், அமெரிக்க அதிபரான பிறகு என்ன செய்வார் என்பது பலருக்கும் புதிராக இருந்து வந்தது. இந்த நிலையில், மேற்கத்திய நாடுகளை சமாதானப்படுத்தும் வகையில், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாகப் பேசிய ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல், முன்னெப்போதையும்விட உலக நாடுகள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் எனவும் கூட்டாகச் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Related Post
Share
Tags: dinamani

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

1 year ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

1 year ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

1 year ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

1 year ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

1 year ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

1 year ago