Categories: உலகம்

நேட்டோ உச்சி மாநாடு: டிரம்ப்புக்கு அழைப்பு

நேட்டோ அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு விடுத்த அழைப்பை அவர் ஏற்றார். வரும் மே மாதம் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் நேட்டோ நாடுகளின் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசுவார் என்று அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நேட்டோ அமைப்பின் தலைமை இயக்குநர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்குடன் அதிபர் டிரம்ப் தொலைபேசியில் உரையாடினார். அப்போது பல்வேறு விவகாரங்களைக் குறித்து இருவரும் பேசினர். ரஷியா – உக்ரைன் எல்லையோரப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழல், சர்வதேச பயங்கரவாத எதிர்ப்புக்கு நேட்டோவின் பங்களிப்பு, நேட்டோ ராணுவ ஒத்துழைப்புக்கான நிதி உள்ளிட்டவை குறித்து அவர்கள் பேசினர்.
நேட்டோ அமைப்பின் நிதிச் சுமையை அந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் சமமான அளவில் ஏற்க வேண்டியது குறித்தும் அவர்கள் பேசினர். சர்வதேச அமைதியை முன்னிட்டு, ரஷியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதன் முக்கியத்துவத்தை தலைமை இயக்குநர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க் வலியுறுத்தினார். நேட்டோ உச்சி மாநாடு பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் வரும் மே மாதம் நடைபெறவுள்ளது. அதில் டிரம்ப் கலந்து கொள்ள வேண்டும் என்று நேட்டோ தலைமை இயக்குநர் அழைப்பு விடுத்தார். அவருடைய அழைப்பை அமெரிக்க அதிபர் ஏற்றார். இவ்வாறு அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அன்றைய சோவியத் யூனியனின் ஆதிக்கத்தை எதிர்க்க மேற்கு ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் நேட்டோ அமைப்பை ஏற்படுத்தின. ராணுவ ஒத்துழைப்பை வலியுறுத்தும் அந்த அமைப்பு தற்கால சர்வதேச அரசியல் சூழலுக்கு ஒவ்வாதது என்று டிரம்ப் கூறி வருகிறார். மேலும், நேட்டோ அமைப்பின் விதிமுறைகளின் கீழ், ராணுவ ஒத்துழைப்புக்கு அமெரிக்கா பெரும் தொகையை ஒதுக்கி வருகிறது. இந்த ஏற்பாட்டை மாற்றப் போவதாகவும் டிரம்ப் கூறி வருகிறார். தங்களின் பாதுகாப்புக்கு நேட்டோ பிற உறுப்பு நாடுகள் கூடுதல் பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறி வருகிறார்.

குடியேற்றத் தடைக்கு எதிராக மனு

Related Post

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள 7 நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் வருவதற்குத் தாற்காலிகத் தடை விதித்து அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கூகுள், ஆப்பிள், டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட 97 நிறுவனங்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. பல ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் குடியேற்றக் கொள்கைக்கு விரோதமாக டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிஃபோர்னியா மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிபர் உத்தரவுக்கு ஏற்கெனவே தாற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share
Tags: dinamani

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

1 year ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

1 year ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

1 year ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

1 year ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

1 year ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

1 year ago