Categories: உலகம்

அமெரிக்காவில் புதிய சட்டமசோதா ₹88லட்சம் சம்பளம் இருந்தால்தான் எச்-1பி விசா

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் எச்-1பி விசா சீர்திருத்த மசோதா நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்டுக்கு ₹88 லட்சம் சம்பளம் பெறுபவர்களுக்கே இந்த விசாவை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் அந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில், இப்போதைய அதிபர் டிரம்ப் தனது பிரசாரத்தில், ”அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டவர்கள் தட்டி பறிப்பதை தடுப்பேன். வெளிநாட்டவர்கள் அங்கு பணி அமர்த்தப்படுவதை குறைக்கும் வகையில் எச்-1பி, எல்1 போன்ற பணி விசாக்களில் மாற்றம் கொண்டு வருவேன்” என்று தெரிவித்தார். தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் தற்போது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எச்-1பி விசா சீர்திருத்த மசோதா நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. எச்-1பி விசா சீர்திருத்தம் ெதாடர்பான, சட்ட மசோதாவை கலிபோர்னியா எம்பி ஜோ லோப்கிரேன் நேற்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தார். புதிய சட்டத்தின்படி, எச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கு அந்நாட்டு தொழிலாளர் துறை கணக்கிட்டுள்ள சம்பளத்தில் 200 சதவீதத்தை அளிக்க வேண்டியது இருக்கும். குறைந்தபட்ச சம்பள பிரிவும் நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்களின் ஊதியம் மற்றம் வேலைகளை அவுட்சோர்ச்சிங் கொடுப்பதை குறைக்க நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை நிறுத்தப்படும். எச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கு 200 சதவீதம் சம்பளம் கொடுக்க முன்வரும் நிறுவனங்களுக்கு விசா வழங்குவதில் முன்னுரிமை போன்ற பல முக்கிய அம்சங்கள் இதில் இடம் பிடித்துள்ளன.இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தால், அமெரிக்க நிறுவனங்கள் எச்-1பி விசா வைத்திருக்கும் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு 1.30 லட்சம் டாலருக்கு (₹88 லட்சம்) மேல் கொடுக்க வேண்டியது இருக்கும். இது தற்போது குறைந்தபட்ச சம்பளமான 60 ஆயிரம் டாலரை(₹40.60 லட்சம்) காட்டிலும் அதிகமாகும். எனவே அமெரிக்க நிறுவனங்கள் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினரை இவ்வளவு சம்பளம் கொடுத்து பணியமர்த்துவது அமெரிக்க நிறுவனங்களுக்கு கடினமான காரியம். இதனால் வெளிநாட்டு குறிப்பாக இந்திய ஐடி நிறுவனங்களுக்கு இது பெரும் அடியாகவே இருக்கும்.ஐ.டி. பங்குகள் சரிவு: அமெரிக்க நாடாளுமன்றத்தில் எச்1பி சீர்திருத்த மசோதா எதிரொலியாக இந்திய பங்குச்சந்தையில் நேற்று கடும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவன பங்குகள் கடந்த பல மாதங்களில் இல்லாத அளவாக சரிவை சந்தித்துள்ளன.2 காஷ்மீர் வீரர்களுக்கு விசா மறுப்பு அமெரிக்காவின் புதிய விசா நடைமுறையை காரணம் காட்டி, காஷ்மீரை சேர்ந்த 2 பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இம்மாதம் 24, 25ம் தேதிகளில் உலக பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. இதில் காஷ்மீரை சேர்ந்த அபித் கான் மற்றும் தன்வீர் ஹூசைன் பங்கேற்க இருந்தனர். இந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் அமெரிக்கா விசா வழங்க மறுத்துள்ளதாகவும், இந்த தகவலை இந்திய வீரர் கான் தன்னிடம் தெரிவித்ததாக நியூயார்க் மேயர் கிளைடே ராபிடேயூ தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மாணவர்களுக்கும் வருகிறது பாதிப்பு: அமெரிக்காவில் படிப்பதற்காக, இந்தியாவில் இருந்து 1.60 லட்சம் பேர் உட்பட உலகம் முழுவதும் இருந்து ஆண்டுக்கு பல லட்சம் மாணவர்கள் அங்கு செல்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், படிக்கும்போதே வேலைவாய்ப்பை பெற்று சம்பாதிக்க முடியும். மேலும், படிப்பை முடித்த பின்னர், 1 முதல் 3 ஆண்டுகள் அங்கு தங்கி வேலை செய்யலாம். இதன் மூலம் பல லட்சம் ரூபாயை சம்பாதிக்க முடியும். விசா தடையை தொடர்ந்து டிரம்ப்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை, படிப்பதற்காக வரும் மாணவர்கள், படிப்பை முடித்தவுடன், சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதுதான். படிக்கும்போதே வேலைவாய்ப்புக்கு தடை செய்யப்பட்டுள்ளதுடன், படித்த பின்னரும் வேலைக்காக தங்கியிருக்க முடியாது என்பதால், மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்.எதிர்ப்பு தெரிவித்த :அட்டர்னி ஜெனரல் நீக்கம் ஈரான், ஈராக் உள்ளிட்ட 7 முஸ்லிம் நாட்டினர் அமெரிக்காவுக்குள் வர விதித்த தடை உத்தரவுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் விவாதம் செய்யாததால் அட்டர்னி ஜெனரல் சாலி யேட்ஸை அதிபர் டிரம்ப் அதிரடியாக பதவியில் இருந்து நீக்கியுள்ளார். புதிய செயல் அட்டர்னி ஜெனரலாக டானா போயிண்டே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மனைவியை அழைத்து செல்ல முடியாது எச்-1பி, எல்1 போன்ற பணி விசாக்கள் வழங்குவதை குறைக்க புதிய உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதனால் பணி விசாக்கள் வழங்குவது குறையும். அதேசமயம், நிர்வாக கெடுபிடிகளும் அதிகரிக்கும். எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் தனது துணையை அழைத்து வருவதற்கு அளிக்கப்பட்ட சலுகை முடிவுக்கு வரும்.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

10 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

10 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

10 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

10 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

10 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

10 months ago