ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகும்போது, ஐரோப்பிய பொதுச் சந்தையிலிருந்தும் பிரிட்டன் விலகும் என்று அந்த நாட்டின் பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதற்காக, அதன் 28 உறுப்பு நாடுகளுடன் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தை அம்சங்கள் குறித்து தெரசா மே லண்டனில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகினாலும், ஐரோப்பிய பொதுச் சந்தையில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்கலாம் என்ற யோசனையை ஏற்க முடியாது. தனி நாடுகள் இடையே பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்களின் மூலம் வர்த்தகம் மேற்கொள்ளப்படும். யூனியலிருந்து விலகுவதற்கான இறுதி ஒப்பந்தம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்றார் அவர்.
எனினும், நாடாளுமன்றத்தில் அந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால், ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்குமா, அல்லது அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளாமலேயே அமைப்பிலிருந்து பிரிட்டன் விலகுமா என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. ஐரோப்பிய பொதுச் சந்தையில் பிரிட்டன் தொடர்ந்தால், பிற ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் கட்டுப்பாடற்ற அனுமதி வழங்க வேண்டியிருப்பதோடு, ஐரோப்பிய நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கும் பிரிட்டன் கட்டுப்பட வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…