அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!: ஒரே நாளில் 61,651 பேர் பாதிப்பு, 365 பேர் உயிரிழப்பு..!!

வாஷிங்டன்: இந்தியாவில் கொரோனா பரவல் 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ள நிலையில் அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியாவில் தொற்று அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,651 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 365 உயிரிழப்புகளும் பதிவாகி இருக்கின்றன. இதுவரை 3 கோடியே 52 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவில் தொற்று மீண்டும் அதிகரிக்க டெல்டா வகை வைரஸே காரணம் என்று அந்த நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து லூசியானா டாக்டர் கேத்தரின் தெரிவித்ததாவது, டெல்டா வகை வைரஸ் வேகமாக பரவக்கூடியது. முந்தைய வகை வைரஸை விட பரவும் தன்மை ஆயிரம் மடங்கு அதிகம் என்று கூறலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் மனிதர்களை கூட டெல்டா வைரஸ் அதிகம் பாதிக்கும் என்று ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குழந்தைகளிடமும் பரவ தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். அமெரிக்காவுக்கு அடுத்ததாக தினசரி தொற்று பிரேசில் மற்றும் இந்தோனேசியாவில் அதிகரித்துள்ளது. இரு நாடுகளிலும் 24 மணி நேரத்தில் தலா 50,000 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3,000 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனிலும் நேற்று 40,000 தினசரி தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஸ்பெயின், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனா பரவலின் 2ம் அலை தீவிரமடைந்து வருகிறது.

Related Post

அதிகம் தொற்றுள்ள நாடுகளின் அட்டவணையில் இந்தியா 2வது இடத்தில் இருந்தாலும் தினசரி தொற்று 40,000த்திற்கும் கீழாக உள்ளது. தொற்று அதிகரித்ததற்கு அதிவேகமாக பரவும் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை வைரஸே காரணம் என்பதால் பொதுவெளியில் பொதுமக்கள் தவறாமல் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன், இந்தோனேசியா ஆகிய நாடுகள் அறிவுறுத்தியிருக்கின்றன.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

1 year ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

1 year ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

1 year ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

1 year ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

1 year ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

1 year ago