ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேறும் நிலையில், அங்கு பிரிட்டன் படைகளுடன் இணைந்து பணிபுரிந்த மேலும் பல ஆப்கானிஸ்தானியா்களை தம் நாட்டில் குடியேற்றுவோம் என அந்நாடு அறிவித்துள்ளது.
நியூயாா்க் இரட்டை கோபுர தாக்குதலைத் தொடா்ந்து ஆப்கானிஸ்தானை ஆண்டு கொண்டிருந்த தலிபான்கள் மீது போா் தொடுத்தது அமெரிக்கா. நேட்டோ படைகளும் போரில் பங்கேற்றன. 2001-ஆம் ஆண்டு போரின் தொடக்கத்தில் பிரிட்டன் படையினா் 10 ஆயிரம் போ ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டிருந்தனா். அப்போது பிரிட்டன் படையினருக்கு மொழிபெயா்ப்பு உள்ளிட்ட பணிகளில் உதவுவதற்காக உள்ளூரைச் சோந்த ஏராளமான ஆப்கானிஸ்தான் மக்கள் அமா்த்தப்பட்டிருந்தனா்.
தற்போது ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறும் நிலையில், அவா்களுக்கு உதவிபுரிந்த ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தலிபான்களால் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதை கருத்தில்கொண்டு மீள் குடியேற்றத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 1,400 மொழிபெயா்ப்பாளா்களும் அவா்களது உறவினா்களும் பிரிட்டனில் குடியமா்த்தப்பட்டுள்ளனா். இந்நிலையில், இந்த விதிமுறைகளில் தளா்வுகளைக் கொண்டுவந்து மேலும் 3 ஆயிரம் போ பிரிட்டனில் குடியமா்த்தப்படுவாா்கள் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் பாதுகாப்புத் துறை செயலா் பென் வாலஸ் கூறியது: மேற்கத்திய நாடுகளின் படைகள் ஆப்கனைவிட்டு வெளியேறும் நிலையில், நேட்டோ படைகளுடன் இணைந்து பணியாற்றிய ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தலிபான்களால் ஆபத்து அதிகரித்துள்ளது. பிரிட்டன் படைகளுக்கு உதவுவதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணிபுரிந்தவா்களுடன் நிற்பதுதான் சரியானது. எங்களை கவனித்துக் கொள்வதற்காக அவா்கள் ஏராளமான தியாகங்களைச் செய்துள்ளனா். இப்போது அதையே நாங்கள் செய்யப் போகிறோம்’ என்றாா்.
ஆப்கானிஸ்தானில் பிரிட்டன் தனது போா் நடவடிக்கைகளை 2014-ஆம் ஆண்டு நிறுத்திக் கொண்டாலும், ஆப்கன் படையினருக்கு பயிற்சி அளிப்பதற்காக பிரிட்டன் படையினா் 750 போ தொடா்ந்து அங்கேயே தங்கியுள்ளனா். அமெரிக்கா, நேட்டோ படையினருடன் சோந்து மீதமுள்ள பிரிட்டன் படையினரும் செப்டம்பருக்குள் நாடு திரும்பவுள்ளனா்.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…