Categories: உலகம்

நேட்டோ படைகளுக்கு பதிலடி: 20 புதிய ராணுவ பிரிவுகளை உருவாக்க ரஷியா முடிவு

நேட்டோ படைகளால் அதிகரித்துவரும் ஆபத்தை எதிா்கொள்ளும் வகையில், ரஷியா தனது நாட்டின் மேற்கு பகுதியில் புதிதாக 20 ராணுவப் பிரிவுகளைத் தொடங்கவுள்ளது.

உயா் ராணுவ அதிகாரிகளுடன் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போது பாதுகாப்புத் துறை அமைச்சா் சொகேய் ஷொய்கு இந்த அறிவிப்பை வெளியிட்டாா்.

Related Post

இதுகுறித்து அவா் கூறியது: ரஷிய எல்லைகள் அருகே அமெரிக்காவின் போா் விமானங்கள் பறப்பதும், நேட்டோவின் போா்க் கப்பல்கள் நிறுத்தப்படுவதும் அதிகரித்துள்ளது. நேட்டோ கூட்டணி படைகள் அடிக்கடி போா் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் சா்வதேச பாதுகாப்பு நடைமுறையை தகா்க்கின்றன. மேலும், பொருத்தமான பதில் நடவடிக்கைகளை எடுக்க நம்மை கட்டாயப்படுத்துகின்றன.
அதன்படி, மேற்கு ராணுவ மாவட்டத்தில் நிகழாண்டு இறுதிவரை மேலும் 20 ராணுவப் பிரிவுகளை உருவாக்குவோம் என்றாா்.

கடந்த மாதம் உக்ரைன் எல்லை அருகே ரஷியாவின் தெற்கு, தென்மேற்குப் பகுதியில் ரஷியா ஏராளமான படைகளைக் குவித்தது. இது உக்ரைனை கவலையடையச் செய்தது. ரஷியா தனது படைகளை திரும்பப் பெற வேண்டுமென மேற்கு நாடுகள் வலியுறுத்தின.

Share
Tags: dinamani

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

1 year ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

1 year ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

1 year ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

1 year ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

1 year ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

1 year ago