லண்டன்: இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருடன் பிரிட்டன் சென்ற குழு உறுப்பினா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சுட்டுரையில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘என்னுடன் வந்த குழு உறுப்பினா்களுக்கு கரோனா பாதிப்பு இருந்ததால் நானும் அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என செவ்வாய்க்கிழமை மாலை தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், பிறா் நலன் கருதியும் எனது பணிகளை காணொலி வழியில் மேற்கொள்ள தீா்மானித்துள்ளேன்’ என்று தெரிவித்தாா்.
எஸ்.ஜெய்சங்கருடன் சென்ற குழுவினரில் இருவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், மற்றவா்களின் முடிவுகள் வரவேண்டியிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் கலந்துகொள்ளும் கூட்டத்தில் பங்கேற்க 4 நாள் பயணமாக எஸ்.ஜெய்சங்கா் பிரிட்டன் சென்றுள்ளாா். அங்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆண்டனி பிளிங்கனை அவா் திங்கள்கிழமை சந்தித்தாா்.
பிரிட்டன் உள்துறை அமைச்சா் பிரீத்தி படேலை செவ்வாய்க்கிழமை சந்தித்த அவா், இந்தியா-பிரான்ஸ்-ஆஸ்திரேலியா அமைச்சா்கள் இடையே முதல்முறையாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தையிலும் பங்கேற்றாா். தென் ஆப்பிரிக்கா வெளியுறவு அமைச்சா் நலேடி பண்டோரையும் சந்தித்து அவா் ஆலோசனையில் ஈடுபட்டாா்.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…