விரைவில் கொரோனா தடுப்பூசி இறக்குமதிக்கான சுங்கவரி ரத்து செய்யப்படும்! மத்தியஅரசு வட்டார தகவல்.

டெல்லி: கோவிட் -19 தடுப்பூசிகளின் இறக்குமதி வரியை இந்தியா தள்ளுபடி செய்யும் என மத்தியஅரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதையடுத்து ரஷ்யாவின் ஸ்புட்னிக்வி தடுப்பூதி உபயோகத்துக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கிய நிலையில், அதை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் ஏற்கனவே ஃபைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனங்கள், இந்தியாவில் பயன்பாட்டுக்கு அனுமதி கோரி விண்ணப்பபித்து உள்ளனர். அவற்றை அனுமதி கொடுப்பது குறித்து மத்தியஅரசு ஆய்வு செய்து வருகிறது.
விரைவில் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தற்போதைய நிலையில், நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து கொரோனா தடுப்பூசிகளின் கொள்ளைமுதலையும் மத்தியஅரசு ஒழுங்குபடுத்தி வருகிறது. ஆனால், பல மாநிலங்கள் தாங்களாகவே இறக்குமதி செய்ய அனுமதி கோரி வருகின்றன.

இந்த நிலையில், இறக்குமதி செய்யப்படும் கொரோன தடுப்பூசிகளுக்கு இந்தியா தனது 10% சுங்க வரியை தள்ளுபடி செய்ய தீர்மானத்துள்ளதாக மத்திய அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Post

மேலும், அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் திறந்த சந்தையில் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தனியார் நிறுவனங்களை அனுமதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் கூறினார். விலை நிர்ணயம் செய்வதற்கான சுதந்திரமும் அவர்களுக்கு வழங்கப்படலாம், என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து 6 நாட்களாக ரஷ்யாவில் 10,000 ஐ தாண்டும் தினசரி கொரோனா தொற்று இந்தியா : கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது மகாராஷ்டிரா : 1 லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு

, ,

இனிவரும் நாட்களில் தீவிரமடையும் கொரோனா சிக்கலை சமாளிக்க அரசு தயாராக இருக்க வேண்டும்! ராகுல்காந்தி Next தமிழகத்தில் ஆக்சிஜன் பிரச்சினைகளுக்கு 104 என்ற உதவிஎண்ணை அழைக்கலாம்! தமிழக அரசு

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago