கொல்கத்தா: இந்தியாவிற்கு சுழற்சி முறையில் செயல்படும் வகையில், மொத்தம் 4 தலைநகரங்கள் அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை எழுப்பியுள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125வது பிறந்தநாளில் நடைபெற்ற நினைவுப் பேரணியில் பங்கேற்றபோது இந்த கருத்தை முன்வைத்தார் மம்தா பானர்ஜி.
அவர் பேசியுள்ளதாவது, ‘எதற்காக ஒரேயொரு தேசிய தலைநகரம் மட்டுமே இருக்க வேண்டும்? நாட்டின் வடக்கு, மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு திசைகளுக்கு சேர்த்து 4 தலைநகரங்களை நிர்மாணிக்கலாமே?
இந்த 4 தலைநகரங்களையும் சுழற்சி முறையில் செயல்பட வைக்கலாமே? அனைத்து நடவடிக்கைகளையுமே டெல்லியிலேயே முடக்கிவிட வேண்டுமா?
இந்தக் கோரிக்கைக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு அளிக்க வேண்டும். ‘ஒரு நாடு, ஒரு தலைவர்’ என்ற கருத்தாக்கத்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டும்’ என்றுள்ளார் மம்தா பானர்ஜி.
இத்தனை நாட்களாக இல்லாமல், இப்போது திடீரென்று இத்தகைய கோரிக்கையை மம்தா பானர்ஜி எழுப்பக் காரணம், சட்டமன்ற தேர்தல்தான் என்ற கருத்தை வலுவாக முன்வைத்துள்ளனர் அரசியல் விமர்சகர்கள். இதன்மூலம், மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கு நெருக்கடி ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘மிஸ்டர் கிளின்’ ராஜீவின் ஆளுமைக்கு பெருமை சேர்த்த ‘ஆபரேஷன் பூமாலை’! இந்திய ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்திய சவுதி இளவரசர் சிபிஎஸ்இ பாடத்திட்டம் 30 சதவீதம் குறைப்பு… மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
ஜெய் ஸ்ரீராம் கோஷம் – மோடியின் கூட்டத்தில் பேச மறுத்த மம்தா பானர்ஜி! Next வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தயாரிப்பு – உள்நாட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பெரிய ஒப்பந்தம்!
விருதுநகர்: ஆந்திர மாநிலம் குண்டூர் மார்க்கெட்டிற்கு வத்தல் வரத்து திடீரென குறைந்துள்ளது. உள்ளூர் வத்தல் வரத்தும் தேவைக்கு ஏற்ப இல்லை,…
பெகுசராய்: கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் சொல்வதை கேட்காத அதிகாரிகளை பிரம்பால் அடியுங்கள் என்று மத்திய பாஜக அமைச்சர் சர்ச்சையாக பேசியுள்ளார்.…
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நாம் தமிழர்…
புதுடெல்லி: தங்களது கணவருக்கு தெரியாமல் கள்ளக்காதல் விஷயத்தில் இந்திய பெண்கள் பலர் ஈடுபடுவதாக 'க்ளீடன்' இணையதளம் நடத்திய ஆய்வில் பரபரப்பு…
சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம்…
சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்த அஜித், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல்…