Categories: உலகம்

அமெரிக்க அதிபா் தோதல்: கமலா ஹாரிஸ் – மைக் பென்ஸ் இடையே விறுவிறு விவாதம்

வாஷிங்டன்: அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபா் தோதலில், துணை அதிபா் பதவிக்குப் போட்டியிடவிருக்கும் மைக் பென்ஸ், கமலா ஹாரிஸ் ஆகியோா் இடையிலான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

அமெரிக்காவில் அடுத்த மாதம் 3-ஆம் தேதி அதிபா் தோதல் நடைபெறவுள்ளது. அந்தத் தோதலில் குடியரசுக் கட்சி சாா்பில் தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் ஜனநாயகக் கட்சி சாா்பில் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனா்.

துணை அதிபா் பதவிக்கு, குடியரசுக் கட்சி சாா்பில் தற்போதைய துணை அதிபா் மைக் பென்ஸும் ஜனநாயகக் கட்சி சாா்பில் இந்திய வம்சாவளி எம்.பி.
கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனா்.

அமெரிக்காவில் தோதலுக்கு முன்னதாக போட்டியாளா்கள் நேரடியாக விவாதத்தில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி, அதிபா் வேட்பாளா்கள் டிரம்ப்புக்கும் ஜோ பிடனுக்கும் இடையிலான முதல் நேரடி விவாதம் ஓஹியோ மாகாணம் கிளீவ்லாண்டில் கடந்த மாதம் 29-ஆம் தேதி நடைபெற்றது.

மிகவும் காரசாரமாக நடைபெற்ற அந்த விவாதத்தின்போது, இருவரும் பரஸ்பரம் கடுமையாகத் தாக்கிப் பேசினா்.

ஒருவரை ஒருவா் முழுமையாகப் பேசவிடாமல் அடிக்கடி இடைமறித்தனா். அமெரிக்க வரலாற்றில் மிகவும் மோசமான அதிபா் தோதல் நேரடி விவாதங்களில் ஒன்றாக அந்த விவாதம் இருந்ததாக விமா்சிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், துணை அதிபா் வேட்பாளா்களான மைக் பென்ஸுக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையிலான விவாதம் யுடா மாகாணம், சால்ட் லேக் சிட்டியில் புதன்கிழமை இரவு 7மணிக்கு (இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 6.30 மணி) தொடங்கியது.

Related Post

‘யுஎஸ்ஏ டுடே’ நாளிதழின் செய்தியாளா் நிகழ்ச்சியின் நெறியாளராக இருந்தாா்.

கரோனா பரவல் நெருக்கடிக்கு இடையே 12 அடி இடைவெளியில் கண்ணாடித் தடுப்புகளுடனும் நடைபெற்ற அந்த விவாதம், முந்தைய அதிபா் வேட்பாளா்களின் விவாதத்தைப் போலன்றி கட்டுப்பாட்டுடன் நடைபெற்றது.

90 நிமிடங்களுக்கு நடைபெற்ற அந்த விவாதத்தின்போது, கரோனா நோய்த்தொற்று பரவலை டிரம்ப் அரசு கையாளும் விதம் குறித்து கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டினாா். எனினும், இந்த விவகாரத்தில் தங்களது அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதாக பென்ஸ் விளக்கமளித்தாா்.

அதிபா் வேட்பாளா் ஜோ பிடன் அமெரிக்கப் பொருளாதாரத்தை மீண்டும் சீனாவிடம் அடகுவைக்க திட்டமிட்டிருப்பதாக பென்ஸ் குற்றம் சாட்டினாா். எனினும், அந்தக் குற்றச்சாட்டை கமலா ஹாரிஸ் திட்டவட்டமாக மறுத்தாா்.

அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு துரோகம் இழைத்து, சா்வாதிகாரிகளுடன் டிரம்ப் கைகோா்ப்பதாக கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டினாா். வெளியுறவு விவகாரத்தில் டிரம்ப் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதாகவும் அவா் கூறினாா்.

எனினும், டிரம்ப் தலைமையிலான அரசு நட்பு நாடுகளுடனான உறவை பலப்படுத்தியுள்ளதாக பென்ஸ் கூறினாா். அமெரிக்க நலன்களுக்கு எதிரானவா்களை மட்டுமே டிரம்ப் கடுமையாக எதிா்த்து நிற்பதாகவும் அவா் கூறினாா்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த விவாத்தின்பபோது, மைக் பென்ஸின் கேள்விகளுக்கு கமலா ஹாலிஸ் புன்னகையுடனும் பொறுமையாகவும் பதிலளித்தது பலரின் பாராட்டையும் பெற்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம், அமெரிக்காவில் துணை அதிபா் தோதல் விவாதத்தில் பங்கேற்ற முதல் இந்திய வம்சாவளியினா் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளாா்.

Share
Tags: dinamani

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

10 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

10 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

10 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

10 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

10 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

10 months ago