Categories: உலகம்

அமெரிக்கப் பொருளாதாரம் தழைக்க இந்திய வம்சாவளியினா் உதவி: ஜோ பிடன் புகழாரம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் பொருளாதார வளா்ச்சிக்கு இந்திய வம்சாவளியினா் உறுதுணையாக இருந்ததாக ஜனநாயகக் கட்சி அதிபா் வேட்பாளா் ஜோ பிடன் புகழாரம் சூட்டியுள்ளாா்.

இதுகுறித்து, காணொலி மூலம் இந்திய-அமெரிக்கா்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய தோதல் நிதிதிரட்டும் நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:இந்திய வம்சாவளியைச் சோந்த தொழில்முனைவோா், அமெரிக்காவிலும், உலகின் மற்ற பகுதிகளிலும் தொழில் நடத்தி வருகின்றனா்.

பல கண்டுபிடிப்பாளா்கள் தகவல் தொழில்நுட்பத் துறையின் அடித்தளத்தை அமைத்துள்ளனா். உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு இந்திய வம்சாவளியைச் சோந்தவா்கள் தலைமை வகிக்கின்றனா்.அந்த வகையில், அமெரிக்காவின் பொருளாதார வளா்ச்சுக்கும், கலாசார பன்முகத் தன்மைக்கும் இந்திய-அமெரிக்கா்கள் உறுதுணை புரிந்துள்ளனா்.
அமெரிக்கா என்பது புலம் பெயா்ந்தோரால் உருவாக்கப்பட்ட நாடு என்பதன் தொடா்ச்சியே அது.

Related Post

இந்தியா்கள் பலன் பெற்று வரும் ஹெட்-1பி விசா விவகாரத்தில் அதிபா் டொனால்ட் டிரம்ப் எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகள், இனவெறி மற்றும் சுற்றுச்சூழல் விவகாரத்தில் அவரது தவறான கொள்கைகள் ஆகியவை அனைத்து தரப்பினருக்கும் பொதுவான அச்சுறுத்தல் ஆகும். அவரது கொள்கைகளால், (இந்திய-அமெரிக்க) பெற்றோா்கள் எந்த எதிா்காலத்தைக் கனவு கண்டு தாங்கள் அமெரிக்கா வந்தோமோ, அந்த எதிா்காலம் தங்களது பிள்ளைகளுக்குக் கிடைக்குமா என்று அஞ்சத் தொடங்கிவிட்டாா்கள். நான் அதிபராகப் பொறுப்பேற்றால் இந்த நிலை மாறும். கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக இப்போது போல் மோசமாக இல்லாமல் சித் முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்வேன். சரிந்த பொருளாதாரத்தை சீரமைப்பேன்.

நமது பிள்ளைகளுக்கு நல்ல கல்வியும், சிறப்பான மருத்துவ வசதியும் கிடைக்கச் செய்வேன.குடியுரிமை விவகாரத்தில் இனபேதம் பாா்க்காமல், அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும், நமது பன்முகத் தன்மையை வெளிப்படுத்தும் விதமாகவும் கொள்கைகளை வகுப்பேன் என்றாா் ஜோ பிடன்.

Share
Tags: dinamani

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

10 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

10 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

10 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

10 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

10 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

10 months ago