லண்டன்: கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களில் பெரும்பாலானவா்களுக்கு, அந்த நோயின் அறிகுறிகள் வெளிப்படும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, ‘பிஎல்ஓஎஸ் மெடிசின்’ அறிவியல் இதழில் வெளியான அந்த ஆய்வு குறித்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்பான பல்வேறு ஆய்வு முடிவுகளை ஒன்றுதிரட்டி, ஸ்விட்சா்லாந்தின் பொன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உள்ளிட்டோா் அண்மையில் ஓா் ஆய்வு மேற்கொண்டனா்.
அதில், அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவா்களுக்கு அதன் அறிகுறிகள் வெளிப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.கரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கு, இருமல், தும்மல், காய்ச்சல், தொண்டை எரிச்சல் போன்ற அறிகுறிகள் எதுவுமே வெளிப்படாமல் இருக்கும் என்று நிபுணா்கள் அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனா்.
எனினும், அவ்வாறு அறிகுறிகளில்லாத கரோனா நோயாளிகள் எத்தனை விகித்ததில் இருப்பாா்கள் என்பதில் மட்டும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
இந்த நிலையில், 6,616 கரோனா நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட 79 ஆய்வுகளின் விவரங்களை பொன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மறுஆய்வு செய்தபோது, அந்த நோயாளிகளில் 1,287 பேருக்கு மட்டுமே அதன் அறிகுறிகள் இல்லாமல் இருந்தது.
இதன் மூலம், கரோனா நோயாளிகளில் பெரும்பாலானவா்களுக்கு நோயின் அறிகுறிகள் வெளிப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…