Categories
உலகம்

மெக்ஸிக்கோவில் மக்கள் மறந்த பெலடோ விளையாட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் இளைஞர்கள்

மெக்ஸிக்கோ: இளைஞர்களின் முயற்சி… மெக்ஸிக்கோவில், மக்கள் மத்தியில் வழக்கற்று போன ‘பெலடோ’ என்ற விளையாட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் அந்நாட்டு இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மெக்ஸிக்கோவில் ‘பெலடா’ என்ற விளையாட்டை பழங்கால மக்கள் விளையாடி வந்தனர். நான்கு பக்கமும் சுவரால் சூழப்பட்ட குறுகிய இடத்தில் பந்தை இருபுறமும் உருட்டி விளையாடுவதே ‘பெலடோ’ விளையாட்டாகும்.

இந்த விளையாட்டை மீட்டெடுக்கும் வகையில், மெக்ஸிக்கோ நகரில் இளைஞர்கள் ஒன்று கூடி, இந்த விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு வரும் இளைஞர்கள், ஐந்து- ஐந்து பேராக இருபுறமும் நின்று கொள்கின்றனர்.

பின்னர் ரப்பர் போன்ற பந்தை தங்களது இடுப்பை கொண்டு நகர்த்தி இந்த விளையாட்டில் ஈடுபடுகின்றனர். உடல் மற்றும் மனதை பலப்படுத்தும் இந்த விளையாட்டை தொடர்ந்து, அங்கு பாரம்பரிய ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இந்த விளையாட்டுக்கு நவீன முறையில் ‘உலாமா’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply