Categories: Uncategorized

போர்ச்சுகல் நாட்டில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் விழுந்து நொறுங்கி உண்டான விபத்தில் 4 பேர் மரணம்

லிஸ்பான்:

போர்ச்சுகல் நாட்டில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 4 பேர் மரணமடைந்தனர்.

போர்ச்சுகல் நாட்டில் தொலைதூர பகுதிகளில் இருக்கும் நோயாளிகளை முக்கிய பெருநகரங்களுக்கு கொண்டு வருவதற்காகவும், நோயாளிகளை சந்தித்து அவசர சிகிச்சை அளிப்பதற்காகவும் கடந்த 1997-ம் ஆண்டில் இருந்து ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன.

Related Post

அவ்வகையில், மாரடைப்பால் பாதிக்கப்பட்ட சுமார் 76 வயது முதியவரை ஏற்றிவந்து போர்ட்டோ நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, பிராகான்க்கா மாவட்டத்தை நோக்கி நேற்றிரவு திரும்பிச்சென்ற ஒரு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சிறிது நேரத்தில் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

இந்நிலையில், மலைகள் சூழ்ந்த சால்ட்டோ என்னுமிடத்தில் அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி கிடந்தது. அதில் இருந்த இரு விமானிகள், ஒரு டாக்டர் மற்றும் துணை மருத்துவர் உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

1 year ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

1 year ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

1 year ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

1 year ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

1 year ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

1 year ago