Categories: Uncategorized

இலங்கையில் மீண்டும் ரணில் விக்ரமசிங்கே இன்று பிரதமராக பதவி ஏற்று கொண்டுள்ளார்

கொழும்பு:

இலங்கையில் கடந்த 51-நாட்களாக நீடித்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்து மீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை கட்ந்த அக்டோபர் 26-ந்தேதி அதிபர் மைத்ரி பால சிறிசேனா நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதற்கிடையே ராஜபக்சேவுக்கு மெஜாரிட்டி கிடைக்காததால் அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலை அறிவித்தார். இதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாதது என அறிவித்தது. பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கியது சட்ட விரோதம் என்றும் தீர்ப்பு அளித்தது.

அதன் பின்னர் பாராளுமன்றத்தில் ராஜபக்சே மீது எதிர்க்கட்சிகள் 2 தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து வெற்றி பெற்றனர். இருந்தும் அவரை பதவியில் இருந்து அதிபர் சிறிசேனா நீக்க வில்லை. இந்த நிலையில் பிரதமர் பதவியில் ராஜபக்சே தொடர்ந்து நீடிக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.

இதனால் அதிபர் சிறிசேனாவுக்கும், ராஜபக்சேவுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பிரதமர் பதவியை ராஜபக்சே நேற்று ராஜினாமா செய்தார்.

Related Post

அதை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமராக சிறிசேனா அறிவித்தார்.

பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. அதற்காக ரணில் விக்ரமசிங்கே ஜனாதிபதி அலுவலகம் வந்தார். அவருடன் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த எம்.பி.க்களும், கட்சி உறுப்பினர்கள் ஏராளமானோரும் வந்து இருந்தனர். உறுப்பினர்கள் 4 பேர் மட்டுமே சென்றனர்.

காலை 11.16 மணியளவில் ரணில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பிரதமராக பதவி ஏற்றார். அவருக்கு அதிபர் சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் இலங்கையில் கடந்த 51 நாட்களாக நீடித்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வந்தன.

ரணில் விக்ரமசிங்கேவை தொடர்ந்து புதிய அமைச்சர்கள் நாளை (17-ந்தேதி) பதவி ஏற்கிறார்கள். 30 பேர் மந்திரிகளாக நியமிக்கப்படுகிறார்கள்.

அவர்களில் 6 பேர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்தவர்கள். இதன்மூலம் ரணில் விக்ரமசிங்கே கூட்டணி அரசு அமைக்கிறார்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

11 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

11 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

11 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

11 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

11 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

11 months ago