Categories: Uncategorized

வழங்க, வழங்குபவர்கள் தகுதியானவர்களா! 75ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த நோபல்பரிசு நிறுத்தம்

21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகிலேயே மிகவும் மதிப்பு மிக்க விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு இந்த ஆண்டு யாருக்கும் வழங்கப்படாது என்று பரிசு வழங்கும் தி ஸ்வீடன் அகாடெமி அறிவித்துள்ளது. பாலியல் புகார்கள், நிதி மோசடிகள் காரணமாக இந்த ஆண்டு விருது வழங்குவதும், தேர்வு செய்யப்படுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக விருது வழங்கும் அமைப்பு அறிவித்துள்ளது. கடந்த 75ஆண்டுகளில் முதல் முறையாக நோபல் பரிசு விருதுகள் அறிவிக்கப்படாமலும், தேர்வு செய்யப்படாமலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து நோபல் பரிசு வழங்கும் ஸ்வீடன் அகெடமியின் நிரந்தர செயலாளர் ஆன்டர்ஸ் ஆல்ஸன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நோபல் பரிசு வழங்கும் ஸ்வீடன் அகெடெமியில் உள்ள உறுப்பினர்கள் பலரும் தற்போது நிலவும் சிக்கல், பிரச்சினைகள் குறித்து அறிந்திருப்பார்கள் என நம்புகிறேன்.
நீண்டகால நோக்கில் சில மாற்றங்களைச் சேர்க்கை எழுந்துள்ளது. புதிய நோபல் பரிசு பெறுபவர்களை அறிவிக்கும் முன் மக்களிடம் இழந்த நம்பிக்கையை நாங்கள் மீட்டெடுப்பது மிகவும் அவசியமாகிறது. பொதுமக்களின், நோபல் அறக்கட்டளையின், எதிர்கால பரிசு பெறுபவர்கள், கடந்த காலத்தில் பரிசு பெற்றவர்கள் ஆகியோரின் மரியாதையை கேள்விக் குறியாக்கி இருக்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 18 பேர் கொண்ட நோபல் பரிசு தேர்வாளர்கள் குழுவில் இருக்கும் உறுப்பினரும், கவிஞருமான காத்தீரனா பிராஸ்டென்சனின் கணவர் ஜீன் கிளாட் அர்னால்ட் ஒரு புகைப்படக்கலைஞர். பிரெஞ்சு நாட்டவரான இவர் மீது 18 பாலியல் புகார்கள் எழுந்தன. மேலும், நோபல்பரிசு அறிவிக்கும் முன்பே அவர்களின் பெயர்களை வெளியிட்டதாக புகார்களும் எழுந்தன. ஆனால், இதை அர்னால்ட் மறுத்தார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று காத்தரீனா பிராஸ்டென்சன் பதவி விலகக் கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், அவர் மறுக்கவே, எதிர்ப்புத் தெரிவித்து உறுப்பினர்கள் குழுவில் உள்ள 3 பேர் பதவியை ராஜினாமா செய்தனர். இந்தப் புகார்கள் அனைத்தும் வெளியே பகிரங்கமானதால், கடும் எதிர்ப்புக் கிளம்பியது, தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் எழுந்தன. இதின் காரணமாக அகடமியின் நிரந்த செயலாளர் சாரா டேனியஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், நோபல் பரிசு அகடமிக்கு எதிராக ஸ்வீடன் முழுக்க பெரும் போராட்டம் வெடித்தது. இதன் காரணமாக இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அடுத்த ஆண்டுடன் சேர்த்து நோபல் பரிசு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசை உருவாக்கிய ஆல்பர்ட் நோபல் மரணத்துக்குப் பின்பு அவரின் பெயரில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ‘மனித இனத்தின் முன்னேற்றத்துக்குப் பங்களித்தவர்களுக்கும் இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் பரிசு வழங்கப்படுகிறது. இதற்காக நோபல் தனது சொத்துக்களைத் தானமாக அளித்தார். நோபல் பரிசு வழங்கத் தொடங்கியதில் இருந்து பாலியல், நிதிமோசடி ஆகிய காரணங்களால் இதுவரை நிறுத்தப்பட்டதில்லை. ஆனால், முதலாம், 2-ம் உலகப்போரின் போது பரிசுகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,777.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago