திருப்பத: மகிந்த ராஜபக்சே நாளை திருப்பதிக்கு வர உள்ளார். ஏழுமலையானை தரிசிக்கும் ராஜபக்சே ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகிந்த ராஜபக்சே வருவதை முன்னிட்டு திருப்பதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ராஜபக்சே வந்து செல்லும் ரேணிகுண்டா விமான நிலையம், திருப்பதி மலை பாதைகள், ஓய்வெடுக்கும் விருந்தினர் மாளிகை, திருப்பதி கோயில், வராக சுவாமி கோயில் உள்ளிட்ட பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்ற நிலையில் ராஜபக்சே வருகிறார். இலங்கையில் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலில், அப்போதைய அதிபர் ராஜபக்சே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
சிறிசேனா வெற்றி பெற்று அதிபர் ஆனார். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம்தான் அங்கு முதன் முதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் சற்றும் எதிர்பாராத வகையில் ராஜபக்சேயின் இலங்கை மக்கள் கட்சி அமோக வெற்றி பெற்றது. அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியும் பிரதமர் ரனில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியும் பின் தங்கின. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வருகிறார் ராஜபக்சே.
source: oneindia.com
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…