Categories: Uncategorized

மோகன்லால் மகனுக்காக விட்டுக்கொடுத்த மம்முட்டி..!

மோகன்லாலின் மகன் பிரணவ் முதன்முதலாக ஹீரோவாக அறிமுகமாகும் ‘ஆதி’ என்கிற படம் இன்று வெளியாகியுள்ளது. ‘த்ரிஷ்யம்’ புகழ் ஜீத்து ஜோசப் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். அதேசமயம் மம்முட்டி நடித்துள்ள ‘ஸ்ட்ரீட்லைட்ஸ்’ படமும் இன்று வெளியாகியுள்ளது. விஸ்வரூபம்-2 ஒளிப்பதிவாளர் ஷாம்தத் ஷைனுதீன் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார்.வழக்கமாக மம்முட்டி படம் கேரளாவில் மட்டும் 200 தியேட்டர்களுக்கு குறையாமல் வெளியாகும். ஆனால் ‘ஸ்ட்ரீட்லைட்ஸ்’ படமோ வெறும் 113 தியேட்டர்களில் மட்டுமே வெளியாகியுள்ளது. அதேசமயம் பிரணவ் மோகன்லாலின் ஆதி’ கேரளாவிலேயே 300 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.ஆனால் மோகன்லால் மகன் படம் என்பதற்காக மட்டும் இவ்வளவு தியேட்டர்கள் கிடைத்து விடவில்லை.
தனது நண்பரின் மகன் அறிமுகமாகும் படம் என்பதால் அவருக்கு நல்ல ஒப்பனிங் கிடைக்கட்டும் என மம்முட்டியே தனது படத்திற்கான தியேட்டர்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள சொல்லிவிட்டாராம். இதற்கு மம்முட்டி பட தயாரிப்பாளர் எப்படி ஒப்புக்கொண்டார் என்கிற சந்தேகம் வேண்டாம். அந்தப்படத்தை தயாரித்திருப்பதும் மம்முட்டியே தான்.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago