Categories: Uncategorized

கோல்டன் குளோப் விருதுகளை அள்ளிய La La Land . லாஸ் ஏஞ்சல்ஸ்சில் கொண்டாட்டம்.

அமெரிக்கத் திரையுலகின், பாரம்பரியமிக்க 74-வது ஆண்டின் Golden Globe விருதுகள் இன்று வழங்கப்பட்டன. சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட 4 விருதுகளை “La La Land” திரைப்படம் அள்ளிச் சென்றது. அமெரிக்க நட்சத்திரங்களின் ஆஸ்கர் விருதுகளுக்கு முன்னோட்டமாக விளங்கும் Golden Globe விருதுகள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வழங்கப்பட்டன.

வண்ணமயமான லேசர் விளக்குகள் ஒளி வீசும் அழகிய கனவுப் பிரதேசமான Beverly Hills அரங்கில் விருதுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது, விருதுக்கான நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மேடையில் தோன்றி, தாங்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்தனர்.
காதல், இசை, நகைச்சுவை என மனதை உருக்கும் வகையில் வெளியாகி வெற்றி பெற்ற “La La Land” திரைப்படம் ஏழு பிரிவுகளில் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றது. அதற்கேற்ப சிறந்த நடிகருக்கான விருது “La La Land” திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய Ryan Gosling-க்கு வழங்கப்பட்டது.

அப்படத்தின் இயக்குனர் Damien Chazelle சிறந்த இயக்குனருக்கான விருதை தட்டிச் சென்றார். சிறந்த இசை மற்றும் பின்னனி இசை உள்ளிட்ட விருதுகளை இப்படத்தின் இசையமைப்பாளர் Justin Hurwitz-க்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் 4 விருதுகளை “La La Land” திரைப்படம் அள்ளிச் சென்றது. துணை நடிகருக்கான விருது Nocturnal Animals படத்தில் நடத்த Taylor-Johnsonக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது Fences திரைப்படத்தில் நடித்த Viola Davis க்கும் வழங்கப்பட்டது. இதேபோல், சிறந்த திரைப்படத்துக்கான விருதையும் Fences திரைப்படம் வென்றது. சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான விருது Zootopia படத்துக்கு வழங்கப்பட்டது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago