Categories: Uncategorized

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின் ஸ்ரீவஸ்தவா, குறிப்பாகத் தினசரி உயிரிழப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டதை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அப்போது நாட்டிலுள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பின.

வெள்ளை அறிக்கை: பொருளாதார வளர்ச்சியில் 3-வது இடத்தில் இருந்து 11-வது இடத்துக்கு சறுக்கிய தமிழகம்

ஒருபுறம் கொரோனாவாலும், மறுபுறம் சரியான நேரத்தில் கொரோனா படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் கிடைக்காமலும் பலர் உயிரிழந்தனர்.
இப்போது தான் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது.

இந்தச் சூழலில் கொரோனா 3ஆம் அலை பற்றி வெளியாகும் தகவல்களும் அச்சமூட்டும் வகையில் உள்ளன. இந்நிலையில், கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில் கொரோனா பாதிப்பின் விகிதம் கவலையளிக்கும் வகையில் உள்ளதாகத் தெரிவித்துள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின் ஸ்ரீவஸ்தவா, தினசரி உயிரிழப்பு விகிதம் மோசமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் கடந்த ஜூலை 4ஆம் தேதி முதலே 3ஆம் அலை தொடங்கிவிட்டதாகத் தெரிவித்தவர்களில் டாக்டர் விபின் ஸ்ரீவஸ்தவாவும் ஒருவர்.

daily death load

Related Post

ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் எத்தனை பேர் உயிரிழந்கின்றனர் என்பதைக் குறிக்கும் daily death load கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருவதாக அவர் எச்சரித்துள்ளார். ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 7 வரையிலான 15 நாட்களில் மட்டும் 10 நாட்கள் இந்த daily death load அதிகரித்துள்ளது. இது கொரோனா 3ஆம் அலை மோசமாகி வருவதையே காட்டுவதாக டாக்டர் விபின் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

அரசு தரவுகள்

இது குறித்து டாக்டர் விபின் ஸ்ரீவஸ்தவா மேலும் கூறுகையில், “ஜூலை 4 முதல் daily death load ஏற்றம் இறக்கும் என இரண்டையும் மாறி மாறிக் கொண்டுள்ளது. வழக்கமாக உயிரிழப்புகள் குறையத் தொங்கும்போதோ அல்லது அதிகரிக்கத் தொடங்கும்போதோ தான் இப்படி நிகழும். ஆனால் கடந்த காலங்களில் ஏற்பட்டதை விட இந்த மறை ஏற்ற இறக்கம் மிக மோமாக உள்ளது. அரசு வெளியிடும் தரவுகள் துல்லியமாக இல்லாதது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். கடந்த காலங்களில் கொரோனா உயிரிழப்புகள் சரி செய்யப்பட்டாலும், அரசு வெளியிடும் தரவுகளின் துல்லியம் பற்றிய சந்தேகங்கள், குறிப்பாக இரண்டாவது அலைக்குப் பிறகு அதிகரித்துள்ளது. இதனால் எதையும் 100% உறுதியாகக் கூறிவிட முடியாது.

Patient Load அதிகரிப்பு

பொதுவாக இன்று ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், கொரோனாவில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் ஒரு லட்சமாக இருக்க வேண்டும். Patient Load எனப்படும் இது எப்போதும் ஒன்று அல்லது அதற்குக் குறைவாக இருக்க வேண்டும். இந்தியாவில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 2ஆம் அலை ஏற்பட்ட போது, இது 2.2 வரை சென்றது. இப்போது கடந்த சில நாட்களாக இது மீண்டும் 1ஐ கடந்துள்ளது கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

source: oneindia.com

Share
Tags: oneindia

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

11 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

11 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

11 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

11 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

11 months ago

கூடுதல் தளர்வுகள் இன்றி ஊரடங்கு நீட்டிப்பு: கலெக்டர் தகவல்

வேலுார்:வேலுார் மாவட்டத்தில், கூடுதல் தளர்வுகள் இன்றி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் இன்று…

11 months ago