Categories: Uncategorized

ராணுவ வீரன், தனது முதல் ஒலிம்பிக் போட்டி, யார் இந்த நீரஜ் சோப்ரா?! நம் தேசத்தின் வரலாற்று நாயகனுக்கு செய்திபுனலின் மணிமகுடம்.!

இன்னும் ஆயிரம் ஆண்டு காலம் ஆனாலும் தன் பெயரை உச்சரிக்காமல், இந்தியாவின் ஒலிம்பிக் வரலாறு எழுத முடியாது என்ற ஒரு மிகப்பெரிய சாதனையை இன்று நீரஜ் சோப்ரா படைத்துள்ளார்.

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின், பானிபட் நகரத்தில், கடந்த 1997ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 24 ஆம் தேதி பிறந்தார் அந்த தங்க மகன் நீரஜ் சோப்ரா.
இவர் இந்திய ராணுவ தரைப்படையில் ‘சுபேதார்’ தரத்தில் இளைய அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டி, தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உலக இளையோர் தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் நீரஜ் சோப்ரா.

var embedId = {jw: [],yt: [],dm: [],fb: []};function pauseVideos(vid) {var players = Object.keys(embedId);players.forEach(function(key) {var ids = embedId[key];switch (key) {case “jw”:ids.forEach(function(id) {if (id != vid) {var player = jwplayer(id);if (player.getState() === “playing”) {player.pause();}}});break;case “yt”:ids.forEach(function(id) {if (id != vid) {id.pauseVideo();}});break;case “dm”:ids.forEach(function(id) {if (id != vid && !id.paused) {id.pause();}});break;case “fb”:ids.forEach(function(id) {if (id != vid) {id.pause();}});break;}});}function pause(){pauseVideos()}
THE THROW THAT WON #IND A #GOLD MEDAL 😍#Tokyo2020 | #StrongerTogether | #UnitedByEmotion
@Neeraj_chopra1
pic.twitter.com/F6xr6yFe8J
– #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 7, 2021

இந்த நிலையில், 2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் தடகள போட்டியில் கடந்த 4ம் தேதி, முதல் தனக்குக் கிடைக்கப்பெற்ற முதல் வாய்ப்பிலேயே, தனது முதல் ஒலிம்பிக் போட்டியில் 86.65 மீட்டர் நீளத்திற்கு ஈட்டியை எறிந்து நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா.

தனது முதல் ஒலிம்பிக் போட்டியில் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று, உலகத்தை தனது பக்கம் திருப்பினார் நீரஜ் சோப்ரா. ஆம், அந்த இறுதி போட்டி, தங்க பதக்கத்துக்கான போட்டி, 125 ஆண்டுகால வரலாற்றை மாற்றி எழுத போகும் அந்த போட்டி இன்று தான் நடைபெற்றது. இந்தியர்கள் அனைவரும் இன்றைய நாளுக்காக காத்துக்கொண்டிருந்தனர்.

Related Post

இந்த இந்திய இளம் சிங்கம் என்ன செய்யப் போகிறது. தங்கம் வெல்லுமா? நம் தேசத்துக்கு தேசத்தின் வரலாற்றை மாற்றி எழுதுமா? என்று காத்துக் கொண்டிருந்தனர்.

தடகள போட்டியில் தங்கப்பதக்கம் என்ற இந்தியர்களின் 125 ஆண்டுகால தாகத்தை தீர்த்து, இந்திய வரலாற்றில் இந்த நாளை வரலாற்று சிறப்புமிக்க நாளாக, தனது ஈட்டியை கொண்டு மாற்றினார் நீரஜ் சோப்ரா.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதல் சுற்றில் தனது ஈட்டியால் 87.03 மீட்டர் தூரம் எறிந்தார். இரண்டாவது சுற்றில் அதைவிட அதிகமாக, எந்த வீரரும் தொட்டுவிடாத தூரத்தில் தனது ஈட்டியை 87.58 மீட்டர் தூரத்திற்கு செலுத்தினர்.

அந்த தூரத்தை எட்டி பிடிக்க அத்தனை நாட்டு வீரர்களும் முயன்றனர். ஆனால், நீரஜ் குமார் 125 ஆண்டு கால ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் வரலாற்றை பொன் எழுத்துக்களால் பொறிக்கவே தனது ஈட்டியை செலுத்தியாக நின்று, வென்று தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றது. நாடு கொண்டாடி வருகிறது. குடியரசுத்தலைவர் முதல் ஒவ்வொரு குடிமகனும் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த தங்க மகனுக்கு எங்களது செய்திபுனல் நிறுவனம் சார்பாக பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களால் நம் தேசமும், நாங்களும் பெருமை கொள்கிறோம். ஜெய்ஹிந்த்!

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago