Categories: Uncategorized

தமிழகத்தில் புதிதாக அமையும் 11 புதிய மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து ஆய்வு நடத்த ஒன்றிய குழு விரைவில் வருகை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: 11 புதிய மருத்துவக்கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை தொடர்பாக ஒன்றிய குழு ஆய்வு நடத்த விரைவில் தமிழகம் வர உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தியாகிகள் ஆர்யா பாஷ்யம் சங்கரலிங்கனார் செண்பகராமன் ஆகியோரின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17ம் நாள் தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி சென்னை கிண்டியில் உள்ள தியாகிகள் மணி மண்டபத்தில் தியாகிகள் ஆர்யா (எ) பாஷ்யம், சங்கரலிங்கனார், செண்பகராமன் ஆகியோரின் உருவப்படத்திற்கு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: காந்தி மண்டப வளாகத்தில் தியாகிகள் மணி மண்படத்தை திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி திறந்து வைத்தார்.
திமுக ஆட்சிக்கு வரும் போது மொழி போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளுக்கு சிலைகள், மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து நேற்று தியாகிகள் ஆர்யா (எ) பாஷ்யம், சங்கரலிங்கனார், செண்பகராமன் ஆகியோர் சிலைக்கு மலர் தூவி மரியாதை ெசய்யப்பட்டது. அதிமுக ஆட்சியின்போது, 150க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் மண்ணை கொட்டி ஏரியை மூடுவதற்கு முயன்ற போது திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தினர். அப்போது, ஓபிஎஸ்தான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அவர் தான் மண்ணை கொட்டி அந்த ஏரியை மூடுவதற்கான முயற்சி செய்தார்.அதேபோல் தமிழகத்தில் அதிகளவு தடுப்பூசி செலுத்துவது குறித்து பிரதமரே பாராட்டி உள்ளதாக ஒன்றிய அமைச்சர் கூறினார். தமிழகத்தில், 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கை மற்றும் கட்டுமான பணிகள் தொடர்பாக அனைத்து புகைப்பட தரவுகளையும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரிடம் அளித்து உள்ளது. எனவே விரைவில் ஒன்றிய அரசு குழு தமிழகம் வந்து கல்லூரிகளை ஆய்வு செய்ய உள்ளது. அதன்பின் தான் மாணவர்கள் சேர்க்கை குறித்து தெரியவரும். எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சேர்க்கை சம்பந்தமாக 4 கருத்துகளை ஒன்றிய அரசு கூறினார்கள். அந்த நான்கும் தமிழக அரசுக்கு ஏற்புடையதல்ல. எனவே தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 30 மாணவர்கள் வீதம் சேர்த்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் புதியதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளது. அது குறித்து அமைச்சர் பரிசீலப்பதாக கூறியுள்ளார்.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago