Categories: Uncategorized

கொரோனா தடுப்பூசி வீணடிப்பதில் தமிழகம் 3ம் இடம்

சென்னை: நாடு முழுவதும் அதிக அளவில் கொரேனாா தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் 15.5 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. 37.3 சதவீத தடுப்பூசிகளை வீணடித்து ஜார்க்கண்ட் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் சூழலில், கடந்த மே 1-ம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு தடுப்பு மருந்து குப்பியை திறக்கும்பட்சத்தில் 10 பேருக்கு அதனை செலுத்த முடியும். ஒரு குப்பியை திறந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் 10 பேருக்கு செலுத்தவில்லை எனில், மீதமுள்ள மருந்து வீணாகி பயன்படுத்த முடியாமல் போகிறது. அந்த வகையில் அதிகளவு தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.

Related Post

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவித்துள்ளதாவது: தடுப்பூசிகள் வீணாகும் விகிதத்தை ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே வைத்திருக்க மாநிலங்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. ஆனால், பல மாநிலங்கள் அதிகளவு வீணாக்குகின்றன. நாடு முழுவதும் 6.3 சதவீத தடுப்பூசிகள் வீணாகியுள்ளது. அந்த வகையில், அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலம் 37.3 சதவீத தடுப்பூசிகளை வீணடித்து முதலிடத்தில் உள்ளது. அதற்கு இடங்களில் சட்டீஸ்கர் ( 30.2 சதவீதம்), தமிழகம் (15.5 சதவீதம்), ஜம்மு – காஷ்மீர் (10.8 சதவீதம்), மத்திய பிரதேசம் (10.7 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் அதிகமாக தடுப்பூசிகளை வீணடித்துள்ளன. இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

1 year ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

1 year ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

1 year ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

1 year ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

1 year ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

1 year ago