Categories: Uncategorized

புதிய மருத்துவக் கல்லூரி அட்மிஷன் அடுத்த ஆண்டு தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு

மதுரை:

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக்கல்லூரிகளில் அடுத்தாண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல், திண்டுக்கல் உட்பட 11 மாவட்டங்களில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நடப்பாண்டு கலந்தாய்வு பட்டியலில் சேர்க்கக்கோரி மதுரையை சேர்ந்த வாசுதேவா, உயர் நீதிமனற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி,புகழேந்தி அமர்வில் விசரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், தமிழகத்தில் 26 அரசு மருத்துவக்கல்லூரி, 14 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. புதிதாக தொடங்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அடுத்தாண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றார்.

Related Post

அப்போது நீதிபதிகள், போதுமான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் மருத்துவக் கல்லூரிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டாம்.

பொறியியல் கல்லூரிகளை போல் மருத்துவக் கல்லூரிகளும் அதிகரிக்கும் என்பதால், காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்க வேண்டாம் என்றனர். பின்னர், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 31-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு திருப்பத்தூா் மாவட்டத்துக்கு புதிய மருத்துவக் கல்லூரி: அமைச்சா் கே.சி.வீரமணி தமிழகத்தில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உள்ள கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழக அரசு

, , , , , , , , , , , , , , , , , ,

அரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள்? அவற்றை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது? ஐகோர்ட் காட்டமான கேள்வி Next சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago