Categories
Uncategorized

ஆயத்த ஆடை தயாரிப்புக்கு பலம் இன்னோவேட்டிவ் நிறுவனம் களம்

திருப்பூர்:முக கவசம், முழு கவச ஆடை தயாரிப்பு மெஷினரி விற்பனையில், புதிய பலம் சேர்க்க, ‘இன்னோவேட்டிவ் சூயிங் இந்தியா நிறுவனம்’ களம் இறங்கியுள்ளது.கட்டிங் முதல் பேக்கிங் வரை, பின்னலாடை துறைக்கு தேவையான அனைத்துவகை மெஷினரிகள்; உதிரிபாகங்களை தரமாக, நியாயமான விலையில், மூன்று தலைமுறையாக வழங்கி, திருப்பூர் தொழில் துறையினர் மத்தியில், 60 ஆண்டுகளாக தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறது, வெல்நோன் சிண்டிகேட். இந்நிறுவனத்தின் துணை நிறுவனமாக, இன்னோவேட்டிவ் சூயிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கடந்த, 10 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.திருப்பூர், பி.என்., ரோடு புஷ்பா தியேட்டர் அருகே இயங்கும் இந்நிறுவனம், ஜப்பானின் பிரசித்தி பெற்ற ஜூகி தையல் மெஷினின் டீலராக உள்ளது.
ஜூகி தயாரிப்பிலான சிங்கர், ஓவர்லாக், பிளாட்லாக் தையல் மெஷின்கள்; காஜாபட்டன் மெஷின்கள், ஜூகி நிறுவனத்தின் தரத்திலேயே, அனைத்து வகை உதிரிபாகங்களும் இங்கு கிடைக்கிறது.நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சண்முகநாதன் கூறியதாவது:தொழில்நுட்ப மேம்பாட்டில், நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. அதனால், மெஷின் வர்த்தகமும் படிப்படியாக உயரத்துவங்கியுள்ளது. முழு கவச ஆடை, முக கவசம் தயாரிப்பு மெஷின்களை இறக்குமதி செய்து, விற்பனை செய்து வருகிறோம்.திருப்பூர் மட்டுமின்றி, சென்னை, மதுரையிலிருந்தும் இந்த மெஷின்களை வாங்க, தொழில்முனைவோர் ஆர்வம் காட்டுகின்றனர். விவரங்களுக்கு, 95974 77577, 95858 58524 என்ற எண்களில் அழைக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Reply