Categories
Uncategorized

தானியங்கி சுத்திகரிப்பு கருவி: பொறியியல் மாணவர் அசத்தல்

திருப்பூர்:நந்தா பொறியியல் கல்லுாரி மாணவர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து, இரு விதமான தானியங்கி கை கழுவும் கருவிகளை கண்டுபிடித்துள்ளனர்.நந்தா கல்லுாரி சார்பில் கைகழுவும் முறை, முக கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்படுகிறது. தொடர்ச்சியாக, கல்லுாரியின் மின்னணு மற்றும் தொடர்பியல் துறையை சேர்ந்த, 2ம் ஆண்டு மாணவர் பூபேஷ், விரிவுரையாளர் சீனிவாசன் இணைந்து, இருவித தானியங்கி கருவிகளை வடிவமைத்துள்ளனர்.நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் கூறுகையில், ”எளிதாக, விரைவாக கைகளை சுத்தம் செய்யும் வகையில் இக்கருவிகள் உள்ளன. பள்ளி, கல்லுாரி, அலுவலகம், மருத்துவமனை, வங்கிகள், தொழிற்சாலைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அவற்றை வைக்கலாம்.
குறைந்த விலையில் வாங்கி பயன்பெறும் வகையில் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.கல்வி நிறுவன முதன்மை நிர்வாக அதிகாரி ஆறுமுகம், அறக்கட்டளை செயலாளர் நந்தகுமார் பிரதீப், கல்வி நிறுவன செயலாளர் திருமூர்த்தி, தொழில்நுட்ப வளாகத்தின் இயக்குனர் செந்தில் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Leave a Reply