Categories
Uncategorized

இன்ஸ்பெக்டருக்கு கொரோனா: சென்ட்ரல் ஸ்டேஷன் மூடல்

திருப்பூர்:திருப்பூரில், சென்ட்ரல் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், ஸ்டேஷன் மூடப்பட்டது.திருப்பூர் கே.வி.ஆர்., நகரில் உள்ள சென்ட்ரல் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, இரு நாட்களுக்கு முன் கொரோனா அறிகுறி தென்பட்ட நிலையில், அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் தனிமைபடுத்தப்பட்டார். நேற்று அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனால், சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷன் முழுக்க, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, ஸ்டேஷன் மூடப்பட்டது. விரைவில் தற்காலிக மாற்றிடம் தேர்வு செய்யப்பட உள்ளது. ஸ்டேஷனில் பணியாற்றும், 30 போலீசாருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

Leave a Reply