Categories
Uncategorized

நீலகிரியில் மழை வெள்ள பாதிப்பு: திருப்பூரில் இருந்து நிவாரணம்

திருப்பூர்:மழையால் பாதித்த நீலகிரி மாவட்ட மக்களுக்காக, திருப்பூரில் இருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ததால், கூடலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு, திருப்பூரில் இருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.திருப்பூர் மண்டலத்தில் உள்ள, அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பில், மங்கலத்தில் உள்ள, திருப்பூர் மேற்கு ரோட்டரி வளாகத்தில் இருந்து, லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது. மொத்தம், 400 குடும்பங்கள் பயன்படுத்தும், அத்தியாவசிய பொருட்கள், உணவு மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு சென்றுள்ளது.ரோட்டரி கவர்னர் கார்த்திகேயன், வருங்கால கவர்னர் சண்முகசுந்தரம், இளங்குமரன் ஆகியோர், அனுப்பி வைத்தனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ், மண்டல செயலர் சிதம்பரம், உதவி கவர்னர்கள், ரோட்டரி சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.கூடலுார் பகுதியில் உள்ள, ரோட்டரி நிர்வாகிகள் மூலமாக, அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருள் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

Leave a Reply