Categories
Uncategorized

சுதந்திர தினவிழா: மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு

திருப்பூர்:சுதந்திர தினவிழா, எளிமையான முறையில் நாளை நடத்தப்பட உள்ளது.திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், சுதந்திர தினவிழாவை, ஆர்ப்பாட்டமின்றி, அமைதியான முறையில் நடத்தி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், பலத்த கட்டுப்பாடுகளுடன், கலைநிகழ்ச்சிகள் எதுவுமின்றி விழா நடக்க உள்ளது. திருப்பூர் மாவட்ட வருவாய் துறை சார்பில், சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில், நாளை விழா நடக்கிறது.காலை, 8:50 மணிக்கு, கலெக்டர் விஜயகார்த்திகேயன், தேசிய கொடி ஏற்றிவைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் விழா நடக்கும் இடத்துக்கு அழைக்கப்படவில்லை.
மாறாக, அவர்களது வீட்டுக்கே சென்று, கவுரவிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்று வழங்கப்பட உள்ளது. கொரோனா பணியில் சிறப்பாக செயல்பட்ட டாக்டர், செவிலியர், துப்புரவு பணியாளர், வருவாய் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.கலெக்டர் கூறுகையில், ”அரசு வழிகாட்டுதல் படி, விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.

Leave a Reply