Categories
Uncategorized

போட்டோகிராபர் பலி

பல்லடம்,- மங்கலம் ரோட்டை சேர்ந்தவர் ராஜ்கபூர், 49; ஸ்டுடியோ வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, பாரதிபுரத்தில் இருந்து, மங்கலம் ரோட்டுக்கு, திரும்பினார். மங்கலம் நோக்கி வந்த பைக் அவர் மீது மோதியதில், ராஜ்கபூர் படுகாயமடைந்தார். பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சைக்கு முன் உயிரிழந்தார். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.ஆற்றில் மூழ்கி பலிவெள்ளகோவில், மங்கலப்பட்டியை சேர்ந்தவர் அம்பிகாவதி. 40. தனது நண்பர்களுடன் அமராவதி ஆற்றில், நேற்று மதியம் குளிக்க சென்றுள்ளார். பாறை மீது நின்று குளித்துக்கொண்டிருந்த அவர் திடீரென வழுக்கி விழுந்ததில், தலையில் படுகாயம் ஏற்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
அவர், உடற்கல்வி ஆசிரியராக டி.ஆர்.,நகர் அரசு பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தார்.

Leave a Reply