Categories
Uncategorized

கைத்தறிக்கு கை கொடுக்கும் பிரதமர் வலுசேர்க்கும் ஏ.இ.பி.சி.,

திருப்பூர்:மத்திய ஜவுளித்துறை மற்றும் ஏ.இ.பி.சி., இணைந்து, ‘கைத்தறிக்கு குரல் கொடுப்போம்’ என்ற பிரதமரின் அறிவுரையை பிரபலப்படுத்தி வருகின்றன.கடந்த, ஆக.7ல், கைத்தறி தினத்தன்று, நெசவாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, ‘கைத்தறி ஆடைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்; நெசவாளர் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்’ என வலியுறுத்தினார். மத்திய ஜவுளித்துறை அமைச்சகமும், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் இணைந்து, கைத்தறியின் பெருமை கூறும் பிரதமரின் வாசகங்களை, பரவ செய்து வருகின்றன.பிரதமரின் அறிவிப்புப்படி,’கைத்தறிக்கு குரல் கொடுப்போம்’ என்பது உள்ளிட்ட வாசகம் அடங்கிய விளம்பர போர்டு, அதிகளவில் மக்கள் கூடும் வணிக வளாகங்கள், ஜவுளி நிறுவனங்களில் வைக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று, இந்த விளம்பர போர்டு வைக்கப்பட்டது. நிகழ்வில், கலெக்டர் விஜயகார்த்திகேயன், ஏ.இ.பி.சி., செற்குழு உறுப்பினர் குமார் துரைசாமி, இணை இயக்குனர் ஈஸ்வரசுந்தர் மற்றும் கைத்தறி துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் கூறியதாவது:கைத்தறி துறைக்கு குரல் கொடுக்கும் பிரதமரின் முயற்சியில் இணைந்திருப்பது, பெருமையளிக்கிறது. பிரதமரின் வேண்டுகோளை பிரபலப்படுத்தும் வகையில், அவர் கூறிய வாசகம் பொறித்த விளம்பர போர்டுகளை, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட இடங்களில், விளம்பர போர்டு வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி டில்லி, மும்பை, கோல்கத்தா என, நாடு முழுக்க, 1,000க்கும் மேற்பட்ட இடங்களில் நிறுவியுள்ளோம். இதன்மூலம், அனைத்து மக்களிடமும், கைத்தறி குறித்த விழிப்புணர்வு ஏற்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Reply