31 டிசம்பர் 2018 முதல் வாட்ஸ்ஆப் செயல்படவில்லை… சோகத்தில் நோக்கியா வாடிக்கையாளர்கள்…

WhatsApp to stop working : வாட்ஸ்ஆப் ஜனவரி 1ம் (2019) தேதியில் இருந்து சில போன்களில் வேலை செய்யாது என்ற அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகியுள்ளது. நோக்கியாவின் எஸ் 40 இயங்தளத்தில் இயங்கும் போன்களில் இனிமேல் வாட்ஸ்ஆப் வேலை செய்யாது என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்த தங்களின் அதிகாரப்பூர்வ பிளாக் ஸ்பாட்டில் வாட்ஸ்ஆப் நிறுவனம் கூறியுள்ளது “நாங்கள் எடுக்கும் மிகவும் கடினமான முடிவு இது. ஆனால் உங்களின் நண்பர்கள், உறவினர்கள், மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து இருக்க இது போன்ற முடிவினை மேற்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

வாட்ஸ்ஆப் பயன்படுத்த வேண்டுமெனில் நீங்கள் உங்களின் போனை மாற்றியே ஆக வேண்டும்.
இனிமேல் இந்த இயங்குதளத்தின் கீழ் செயல்படும் போன்களில் வாட்ஸ்ஆப் செயல்படாது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்” என கூறியுள்ளது இந்நிறுவனம்.

மேலும் படிக்க : 2018ல் வாட்ஸ்ஆப்பில் வெளிவந்த சிறந்த அப்டேட்டுகள்

Related Post

WhatsApp to stop working on Nokia Phones

S40யில் செயல்படும் போன்களில் வாட்ஸ்ஆப் செயல்பாட்டை நிறுத்த ஜூன் மாதமே முடிவு செய்திருந்தது. ஆனால் டிசம்பர் 31 (2018) வரை அந்த காலக்கெடுவினை நீட்டித்தது. (2017) கடந்த வருடம் பிளாக்பெர்ரி ஓ.எஸ், பிளாக்பெர்ரி 10, விண்டோஸ் 8.0, மற்றும் நோக்கியா S60 பிளாட் பார்ம்களில் செயல்படும் போன்களில் சேவையை நிறுத்தியது வாட்ஸ்ஆப்.

நோக்கியா 206 சிங்கிள் சிம், நோக்கியா 206 டபுள் சிம், நோக்கியா 208, நோக்கியா 301 (சிங்கிள் சிம் சாட் எடிசன், டபுள் சிம் சாட் எடிசன்), நோக்கியா 515, நோக்கியா ஆஷா 201, நோக்கியா ஆஷா 201 எடிசன், நோக்கியா ஆஷா 210, நோக்கியா ஆஷா 230 (சிங்கிள் மற்றும் டபுள் சிம்)

நோக்கியா ஆஷா சீரியஸ்ஸில் 300, 302, 303, 305, 306, 308, 309, 310, 311, 500, 501, 502, 503 போன்ற போன்களும் நோக்கியா சி3 – 00, நோக்கியா சி3-01, நோக்கியா X2-00, நோக்கியா X2-01,நோக்கியா X3-01, நோக்கியா X3-02.5 போன்ற போன்களிலும் இனி வாட்ஸ்ஆப் வேலை செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago