ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பேட்டன் அல்லது பின் பாஸ்வேர்டை ஹேக் செய்து மாற்றுவது எப்படி?

ஆண்ட்ராய்டில் பேட்டன் மற்றும் பின் லாக் உள்ளிட்டவை ஸ்மார்ட்போனின் பாதுகாப்பிற்காக அதிகம் பயன்படுத்தப்படும் அம்சங்களாக இருக்கின்றன. எனினும், சில சமயங்களில் பேட்டன் அல்லது பின் பாஸ்வேர்டினை பலரும் மறந்து விடுவது இயல்பான விஷயம் தான். பாஸ்வேர்டாக செட் செய்யப்படும் பின் அல்லது பேட்டன்கள் மறந்துவிடுவது அவ்வளவு சிக்கலான காரியமில்லை. நீங்கள் மறந்து போன பாஸ்வேர்டு அல்லது பின்களை கிராக் செய்ய பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன.

பேட்டன் அல்லது பின் பாஸ்வேர்டுகளை மறந்து போகும் பட்சத்தில் ஸ்மார்ட்போனினை ஃபேக்ட்ரி ரீசெட் செய்தால் மட்டுமே திரும்பவும் பயன்படுத்த முடியும். இவ்வாறு செய்யாமல் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.

எளிமையாக பேட்டன் அல்லது பின் பாஸ்வேர்டை ஹேக் செய்வது எப்படி?

உங்களது கூகுள் அக்கவுண்ட்டில் லாக் இன் செய்திருந்தால் இந்த செயலி அல்லது வலைத்தளம் மூலமாக ஸ்மார்ட்போனினை பாஸ்வேர்டை மாற்றலாம். இதனால் ஸ்மார்ட்போனின் பாஸ்வேர்டை மறந்துவிட்டால் இந்த வழிமுறையை பயன்படுத்தி பாஸ்வேர்டை மாற்றிக் கொள்ளலாம்.

1 – உங்களது கம்ப்யூட்டர் அல்லது இதர சாதனங்களில் டிவைஸ் மேனஜர் செயலியை டவுன்லோடு செய்யலாம். செயலி வேண்டாம் என்பவர்கள் வலைத்தளத்தில் டிவைஸ் மேனேஜர் பயன்படுத்தலாம்.

2 – லாக் செய்யப்பட்ட சாதனத்தில் நீங்கள் பயன்படுத்திய கூகுள் அக்கவுண்ட்டை புதிய சாதனம் அல்லது கம்ப்யூட்டரில் சைன் இன் செய்ய வேண்டும்.

3 – லாக் இன் செய்ததும் ரிங், லாக், இரேஸ் என மூன்று ஆப்ஷன்கள் தெரியும். இதில் லாக் செய்யக் கோரும் ஆபஷனை பயன்படுத்த வேண்டும்.

4 – இனி புதிய பாஸ்வேர்டை உருவாக்கி லாக் செய்யக் கோரும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

5 – இனி புதிய பாஸ்வேர்டு கொண்டு லாக் ஆன சாதனத்தை அன்லாக் செய்து கொள்ளலாம்.

பின் மறந்து போகும் பட்சத்தில் சாதனத்தை இயக்க இது சிறப்பான வழிமுறையாக இருக்கும்.

ஸ்மார்ட்போனின் லாக் ஸ்கிரீனை டிசேபிள் செய்ய ஆண்ட்ராய்டு SDK பயன்படுத்த துவங்கும் முன் உங்களது சாதனத்தில் யு.எஸ்.பி. டீபக்கிங் ஆன் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது முக்கியமானதாகும். மேலும் இது உங்களது சாதனத்தை கம்ப்யூட்டருடன் ADB மூலம் இணைந்திருக்க வேண்டும்.

1 – இந்த செயலியை அதன் வலைத்தளத்தில் இருந்து டவுன்லோடு செய்து, உங்களின் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து கொண்டு சரியான ஃபைல்களை எக்ஸ்டிராக்ட் செய்ய வேண்டும்.

2 – உங்களது கம்ப்யூட்டரை யு.எஸ்.பி. கேபிள் மூலம் கம்ப்யூட்டருடன் இணைக்க வேண்டும்.

3 – இனி Tools எனும் ஃபோல்டர் சென்று ஆண்ட்ராய்டு SDK இன்ஸ்டாலேஷன் டைரக்ட்ரி செல்ல வேண்டும்.

4 – மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஃபோல்டரை ஷிஃப்ட் மற்றும் ரைட் க்ளிக் செய்து பின் Open Command Window Here எனும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி கமாண்ட் பிராம்ப்ட் திறக்கும்.

Related Post

5 – இங்கு, ‘ADB shell rm /data/system/gesture.key’ என டைப் செய்து பின் என்டர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

6 – உங்களது சாதனத்தை கம்ப்யூட்டரில் இருந்து எடுத்துவிட்டு பின் சாதனத்தை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பின் உங்களது சாதனத்தில் பேட்டன் லாக் டிசேபிள் செய்யப்பட்டு இருக்கும்.

இவ்வாறானதும், சாதனத்தின் பாஸ்வேர்டை மாற்றிக் கொள்ளலாம்.

மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் எவ்வித வழிமுறைகளும் பலனளிக்காத பட்சத்தில் இதனை பின்பற்றலாம். இவ்வாறு செய்யும் போது உங்களின் சாதனத்தில் உள்ள அனைத்து தரவுகளும் அழிந்துவிடும்.

1 – சாதனத்தை ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும்.

2 – பவர் மற்றும் வால்யூம் அப் பட்டன்களை ஒரே சமயத்தில் அழுத்திப் பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது போன் ரிக்கவரி மோட் திறக்கும். ஒருவேளை இது பலனளிக்காத பட்சத்தில் உங்களது சாதனத்தில் ரிக்கவரி மோட் திறக்கச் செய்யும் குறியீடுகளை கூகுள் செய்து தெரிந்து கொள்ளவும்.

3 – வால்யூம் டவுன் பட்டன் க்ளிக் செய்து Recovery Mode என்ற ஆப்ஷன் வந்ததும் பவர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் சாதனம் ரீஸ்டார்ட் ஆகி ரிக்கவரி மோட் திறக்கும்.

4 – மீண்டும் வால்யூம் டவுன் பட்டன் மூலம் ‘wipe data/factory reset’ ஆப்ஷன் சென்று முன்பை போன்று பவர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

5 – இனி டவுன் பட்டன் மூலம் yes ஆப்ஷனில் வைத்து பவர் பட்டன் க்ளிக் செய்து, தேர்வை உறுதிப்படுத்த வேண்டும்.

6 – ரீசெட் ஆக சில காலம் ஆகும் என்பதால், அதுவரை காத்திருக்க வேண்டும். வழிமுறை நிறைவுற்றதும், சாதனத்தை செட்டப் செய்து கொள்ளலாம். இவ்வாறானதும் சாதனம் புதிதாக வாங்கிய சமயத்தில் இருக்கும்.

ஆண்ட்ராய்டு சாதனத்தை அன்லாக் செய்யும் மற்றொரு வழிமுறை அதன் UI இன்டர்ஃபேஸ் இயக்குவதாகும்.

1 – ஆண்ட்ராய்டு ஸ்கிரீன் லாக் ஸ்மேஷ் செய்ய எமர்ஜன்சி பட்டனை ஒருமுறை க்ளிக் செய்து 10 முறை ஸ்டார் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

2 – லாக் ஸ்கிரீன் வந்து கேமரா ஷார்ட்கட் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இனி நோட்டிஃபிகேஷன் பாரை கீழே இழுத்து செட்டிங் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

3 – இவ்வாறு செய்த பின் பாஸ்வேர்டை பதிவு செய்யக் கோரும், இவ்வாறு மீண்டும் செய்ய வேண்டும். அழுத்திப்பிடித்து பேஸ்ட் செய்யக் கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்யும் போது லாக் ஸ்கிரீன் ஷேட்டர் ஆகி விடும்.

source: gizbot.com

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago