பேஸ்புக் பங்குதாரர்களால் கை கழுவி விடப்படும்!!! மார்க் சூக்கர்பர்க்!! கைமாறுகிறதா பேஸ்புக் நிறுவனம்?

ஃபேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதை அடுத்து, ஃபேஸ்புக் நிறுவன பங்குதாரர்கள், அனைவரும், ‘ நிறுவன தலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சூக்கர்ப்ர்க் விலக வேண்டும்’ என அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்சமயம், தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட இரண்டு பொறுப்புகளை மார்க் சூக்கர்பர்க் வகிக்கிறார்.
இது, ‘ஃபேஸ்புக்கின் நிர்வாக அமைப்பு முதலீட்டாளர்களுக்கு சிக்கலான சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது’ என்றும், ‘மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது’ என்றும், ‘முதலீட்டாளர்கள் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், பங்குதாரர் மதிப்பை பாதுகாக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியமானது’ என்றும், இல்லினியோஸ் மாநில பொருளாளர் மைக்கேல் ஃபிரெரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

Related Post

ஹேக்கர்கள் கைவரிசையால் சுமார் மூன்று கோடி பேரின் விவரங்கள் ஃபேஸ்புக்கில் இருந்து திருடப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 8.7 கோடி பேரின் விவரங்கள் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது போன்றவை அம்பலமானது.

மே 2019 இல் நடைபெற இருக்கும் கோரிக்கைக்கான வாக்கெடுப்பு ஃபேஸ்புக் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில் நடைபெறலாம், எனினும் இந்த கோரிக்கை நிறைவேறும் வாய்ப்புகள் குறைவே. ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாக்களிக்கும் உரிமைகளில் சுமார் 70 சதவிகிதம் சூக்கர்பர்க் மற்றும் சிறு நிறுவனங்களே கொண்டுள்ளனர். சென்ற ஆண்டு இதேபோன்ற சூழல் ஏற்பட்ட போது சுமார் 51 சதவிகித பங்குதாரர்கள் மார்கிற்கு ஆதரவளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago