இனி Google Meet இலவச வீடியோ காலிங் சேவை கிடையாது Google அதிரடி.

கூகுள் நிறுவனத்தின் வீடியோ கான்பரன்சிங் சேவையான கூகுள் மீட் இதுவரை வழங்கி வந்த வரம்பற்ற இலவச சேவையை நிறுத்திவிட்டது. இதன் காரணமாக கூகுள் மீட் சேவையை 60 நிமிடங்களை கடந்து பயன்படுத்த முடியாது.

தற்போது கூகுள் தனது இலவச சேவையை நிறுத்தி இருக்கும் நிலையில், ஜூம் தொடர்ந்து இலவச சேவையை வழங்கி வருகிறது. முன்னதாக செப்டம்பர் 30, 2020 முதல் இலவச அன்லிமிட்டட் க்ரூப் காலிங் வசதியை நீக்க கூகுள் திட்டமிட்டது. எனினும், இந்த தேதியை 31 மார்ச் 2021 மற்றும் ஜூன் 30, 2021 வரை நீட்டித்தது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று உச்சம் அடைந்ததால், கூகுள் மீட் க்ரூப் மீட்டிங் சேவை இலவசமாக வழங்கப்பட்டது.
உலகளாவிய கூகுள் பயனர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற இது பேருதவியாக இருந்தது. கூகுள் மட்டுமின்றி ஜூம் சேவையிலும் பயனர்களுக்கு இலவச சேவை வழங்கப்பட்டது.

Related Post

இலவச Google கணக்கு மூலம், 100 பங்கேற்பாளர்களுடன் ஒரு மணிநேரத்திற்கு ஒரு மீட்டிங் தொடங்கலாம். இருப்பினும், கூகிள் மீட்டைப் பயன்படுத்தி 24 மணிநேரம் நீங்கள் ஒருவரையொருவர் சேட் செய்யலாம் . அன்லிமிட்டட் க்ரூப் காலிங் அம்சத்தைப் பெற பயனர்கள் Google Workspace சந்தாவை வாங்க வேண்டும்.

இலவச அன்லிமிட்டட் க்ரூப் காலிங் அம்சத்திற்கு கூடுதலாக, சந்தா கஸ்டம் ஈமெயில் சேவைகள், க்ளவுட் ஸ்டோரேஜ் மற்றும் விற்பனைக்குப் பின் ஆதரவு ஆகியவற்றை வழங்குகிறது. கூகிள் மீட்டிற்க்காக பிரீமியம் சந்தாவை நீங்கள் தனித்தனியாக வாங்க முடியாது, ஏனெனில் இது Google Workspace பண்டலில் மட்டுமே கிடைக்கிறது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago