நாடாளுமன்ற நிலைக்குழு முன் 18ஆம் தேதி ஆஜராக டிவிட்டருக்கு உத்தரவு!

டெல்லி: தகவல் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுமுன், வரும் 18-ம்தேதி டிவிட்டர் நிறுவனம் ஆஜராகவேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் மூலம் நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக தகவல் தொழில்நுட்ப விதிகளை கொண்டு வந்தது.
அந்த விதிகளை பின்பற்ற வேண்டும் என பேஸ்புக், oவிட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களுக்கு மே 25 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், சில நிறுவனங்கள் இந்திய அரசின் விதிகளை ஏற்க டிவிட்டர் நிறுவனம் மறுத்து வருகிறது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட்டும், இந்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், இந்திய அரசின் புதிய விதிகளை டிவிட்டர் நிறுவனம் ஏற்க வேண்டும் என்றும், இல்லையேல் சட்டரீதியிலான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என டிவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.

Related Post

அதைத்தொடர்ந்து பணிந்து வந்த டிவிட்டர் நிறுவனம், கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் விதிகளை ஏற்க கூடுதல் கால அவகாசம் தரும்படி கோரிக்கை வைத்துள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழு முன் வரும் 18 ஆம் தேதி ஆஜராக டிவிட்டர் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது .

Share

Recent Posts

படப்பிடிப்பில் ஜெய்க்கு நிகழ்ந்த விபரீதம்.! ஆனாலும், அவர் செய்த நல்ல விஷயம்.!

பிரபல தமிழ் நடிகர் ஜெயின் அர்ப்பணிப்பை கண்டு படக்குழு ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜெய்.…

4 hours ago

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை. சற்றுமுன் பரபரப்பு தகவல்.!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு…

4 hours ago

இது எப்போ வரும்னு தெரியல.. கன்னடத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்.. ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்.!!

KGF இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில் அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.கன்னட படங்களில்…

4 hours ago

அருள்நிதியின் ‘தேஜாவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அருள்நிதி நடித்து வரும் 'தேஜாவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.தேஜாவு என்று தலைப்பிட்டுள்ள அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கும் இந்த…

4 hours ago

கணவனான காதலன்.. சீரியல் நடிகையின் 8 வருட கனவு.. தலைமையேற்ற புன்னகை மன்னன்.!!

பாடலாசிரியர் சினேகனின் திருமணம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரும் பிக்பாஸ் நிகழ்ச்சி…

4 hours ago

ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது ‘பிசாசு 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஆண்ட்ரியா நடித்து வரும் 'பிசாசு 2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது.2014 ஆம் ஆண்டு…

4 hours ago