Jio Users-க்கு நல்ல செய்தி: இனி Whatsapp மூலம் ரீசார்ஜ் செய்யலாம்

Jio Users good news: ஜியோ பயனர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கவுள்ளன. ரிலயன்ஸ் ஜியோ ஏற்கனவே பல நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. தற்போது ஜியோ பயனர்களுக்கு மேலும் பல நன்மைகள் கிடைக்கவுள்ளன.

இனி Jio பயனர்கள் (Jio Users) WhatsApp மூலம் தங்கள் மொபைலை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இது மட்டுமல்லாமல், Jio பயனர்கள் தங்கள் அருகிலுள்ள தடுப்பூசி மையத்தில் கோவிட் தடுப்பூசி கிடைப்பது பற்றிய தகவல்களையும் பெற முடியும். ஜியோ இந்த சேவையை வாட்ஸ்அப் சாட்போட் மூலம் தொடங்கியுள்ளது. இது குறித்து நிறுவனம், “இப்போது ஜியோ பயனர்கள் பில்களை செலுத்துவது, எங்களிடம் கேள்விகளை கேட்பது, புகார் அளிப்பது ஆகியவற்றைத் தவிர வாட்ஸ்அப்பின் உதவியுடன் சாட்போட்டில் பல சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.” என்று தெரிவித்துள்ளது.

WhatsApp-பிலேயே புதிய Jio SIM-ஐ ஆர்டர் செய்யலாம்

நிறுவனத்தின் இந்த புதிய சேவையைப் பயன்படுத்தி, பயனர்கள் புதிய ஜியோ சிம்மையும் ஆர்டர் செய்யலாம். WhatsApp-பில் பயனர்களுக்கு Jio SIM ஆதரவு, ஜியோ ஃபைபர், சர்வதேச ரோமிங் மற்றும் ஜியோ மார்ட் தொடர்பான சேவைகளை நிறுவனம் வழங்குகிறது. ஒட்டுமொத்தமாக, இப்போது பயனர்கள் ஜியோ சிம் மூலம் ஜியோ மொபிலிட்டி, ஃபைபர் மற்றும் ஜியோ மார்ட் கணக்கை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.

Airtel XStream vs Jio Fiber broadband plans: எந்த பிளான் பெஸ்ட்

WhatsApp-பில் ‘Hi’ என டைப் செய்து செய்தி அனுப்ப வேண்டும்

இ-வாலட், யுபிஐ (UPI), கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் போன்ற கட்டண விருப்பங்களுக்கு, ஜியோ பயனர்கள் ‘Hi’ என்று டைப் செய்து 70007 70007 க்குWhatsApp செய்தியை அனுப்பலாம். இப்போது நிறுவனம் புதிய அம்சத்தை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் வழங்கி வருகிறது. விரைவில் இந்த சேவை பிற மொழிகளிலும் கிடைக்கும்.

Related Post

இந்தி மற்றும் ஆங்கில மொழியில் சேட் ஆப்ஷன் கிடைக்கும்

இந்த புதிய சேவையில் பயனர்களுக்கு மொழியை மாற்றுவதற்கான விருப்பத்தையும் ஜியோ வழங்கியுள்ளது. நீங்கள் சாட்போட்டின் மொழியை மாற்ற விரும்பினால், சேட் மொழியை மாற்றுவதற்கான ஆப்ஷனை (change chat language) கிளிக் செய்யவும். உங்கள் வசதிக்கு ஏற்ப இந்தி அல்லது ஆங்கிலத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். எதிர்காலத்தில் இந்த சேவையில் பிற மொழிகளும் சேர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.

Jio Phone good news: இனி மிகக்குறைந்த விலையில் இந்த மலிவு விலை போனிலும் WhatsApp Calling செய்யலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!! Android Link – https://bit.ly/3hDyh4G Apple Link – https://apple.co/3loQYeR

Share

Recent Posts

பிரபல நாட்டிற்கு சென்றுள்ள மந்திரி. துணை பிரதமருடன் முக்கிய சந்திப்பு. வெளியான பரபரப்பு தகவல்..!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று கத்தார் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியை…

1 hour ago

கொரோனாவால் அதிகமான தீவிரவாதம்.. அறிக்கை விடுத்த உள்நாட்டு உளவுத்துறை அமைச்சர்..!!

கொரோனா நேரத்தில், தீவிரவாத எண்ணங்கள் அதிகரித்துள்ளதோடு மட்டுமல்லாமல் வன்முறை குற்றங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது என்று ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.கொரோனா…

1 hour ago

இந்தோனேசியா : தடுப்பூசி போட்டுக் கொள்ள வாங்க… கோழியுடன் போங்க.!

இந்தோனேசியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு, இலவசமாக கோழி வழங்கப்படுகிறது. CIPANAS பகுதியிலுள்ள மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயக்கம்…

1 hour ago

அமெரிக்க அதிபர் பைடன் – ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு

www.patrikai.com Tamil news websitePulses PRO Tamil news websiteSign in / Joinwww.patrikai.com Tamil news websitetype here...…

1 hour ago

குல்பூஷனுக்கு வக்கீல் நியமனம் வழக்கு 4 மாதம் ஒத்திவைப்பு: பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத்: இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் தொழில்ரீதியாக ஈரான் சென்றபோது பாகிஸ்தான் உளவு படையால் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானில்…

1 hour ago