கூகுள் போட்டோஸ் ஸ்டோரேஜ் ஜூன் 1 முதல் இலவசம் இல்லை

புதுடில்லி: இணையத்தில் கிடைக்கும் சிறந்த புகைப்பட சேமிப்பு தளங்களில் ஒன்று கூகுள் போட்டோஸ். இதில், உயர்தர புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, வரம்பற்ற அளவில் இலவசமாக சேமிக்கலாம்.

இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பரில், ‘கூகுள் 2021 ஜூன் 1 முதல் கூகுள் போட்டோஸ் தளத்தில் ‘உயர் தரமான’ புகைப்படங்களுக்கான வரம்பற்ற இலவச சேமிப்பிடம் என்ற சலுகை நிறுத்தப்படும்’ என, அறிவித்தது.

கூகிள் போட்டோஸ் வழங்கி வந்த இந்த வரம்பற்ற இலவச சேமிப்பு சலுகை இந்த மாதத்துடன் முடிவடைகிறது. வரும் ஜூன் 1ம் தேதிக்கு முன்னதாக, பயனர்கள் பதிவேற்றிய உயர் தரத்திலான புகைப்படங்கள் மட்டும் வீடியோக்கள், 15 ஜிபிக்குள் இருந்தால் அதை கூகுள் கணக்கு சேமிப்பிடத்தில் கணக்கிடப்படாது. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு விலக்கு உண்டு. அதாவது ஜூன் 1க்குப் பிறகு, கூகுள் போட்டோஸ் தளத்தில் 15 ஜிபி என்ற அளவிற்கு மட்டுமே படம், வீடியோக்களை சேமிக்க முடியும். அதற்கு மேல் என்றால், அதற்கு கூகுள் ஒன் (Google One) என்பதற்கான சந்தாவை செலுத்த வேண்டும்.

Related Post

கூகுள் ஒன்னின் அடிப்படை சந்தா 100 ஜிபி திட்டத்துடன் துவங்குகிறது. இதற்கு மாதத்திற்கு ரூ.130 அல்லது ஆண்டுக்கு ரூ.1,300 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடனும் ஸ்டோரேஜை பகிரலாம். 200 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் திட்டமும் உள்ளது. இதற்கு மாதம் ரூ.210 அல்லது ஆண்டுக்கு ரூ.2,100 ஆகும். 2டிபிக்கு மாதத்திற்கு ரூ.650 மற்றும் வருடத்திற்கு ரூ.6,500 செலுத்த வேண்டும். 10டிபிக்கு, மாதத்திற்கு ரூ.3,250 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், உலகளவிலான பிக்சல் (Pixel) பயனர்களுக்கு இது பொருந்தாது என, கூகிள் கூறியுள்ளது. நீங்கள் ஒரு பிக்சல் சாதனம் வைத்திருந்தால், கூகுள் போட்டோசில் வரம்பற்ற வகையில் இலவச உயர்தர புகைப்படங்களை சேமிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.கூகுள் போட்டோசுக்கு மாற்றாக டிஜிபாக்ஸ், டீகோ, மைக்ரோசாப்ட் ஒன்ட்ரைவ் உள்ளிட்வை உள்ளன. இவற்றில் சேமிப்பு திட்டத்திற்கான கட்டணம் கூகுள் போட்டோஸ் அறிவித்ததை விடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

படப்பிடிப்பில் ஜெய்க்கு நிகழ்ந்த விபரீதம்.! ஆனாலும், அவர் செய்த நல்ல விஷயம்.!

பிரபல தமிழ் நடிகர் ஜெயின் அர்ப்பணிப்பை கண்டு படக்குழு ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜெய்.…

3 hours ago

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை. சற்றுமுன் பரபரப்பு தகவல்.!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு…

3 hours ago

இது எப்போ வரும்னு தெரியல.. கன்னடத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்.. ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்.!!

KGF இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில் அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.கன்னட படங்களில்…

3 hours ago

அருள்நிதியின் ‘தேஜாவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அருள்நிதி நடித்து வரும் 'தேஜாவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.தேஜாவு என்று தலைப்பிட்டுள்ள அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கும் இந்த…

3 hours ago

கணவனான காதலன்.. சீரியல் நடிகையின் 8 வருட கனவு.. தலைமையேற்ற புன்னகை மன்னன்.!!

பாடலாசிரியர் சினேகனின் திருமணம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரும் பிக்பாஸ் நிகழ்ச்சி…

3 hours ago

ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது ‘பிசாசு 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஆண்ட்ரியா நடித்து வரும் 'பிசாசு 2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது.2014 ஆம் ஆண்டு…

3 hours ago