புதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய சஃபாரி எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு ஜனவரி 26ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள ஹாரியர் எஸ்யூவி அடிப்பையிலான கிராவிட்டாஸ் கான்ற்செப்ட்டை தழுவியதாக சஃபாரி அமைந்துள்ளது.

புதிய டாடா சஃபாரி எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் கிரையோடெக் டீசல் என்ஜின் அதிகபட்சமாக 170 ஹெச்பி பவர்மற்றும் 350 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும். இந்த காருக்கான டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் 6 வேக மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.
2 வீல் டிரைவ் முதற்கட்டமாகவும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் சற்று தாமதமாக விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

லேண்ட் ரோவரின் OMEGARC பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட ஹாரியர் எஸ்யூவியின், அதே பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ள சஃபாரியில் இந்நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 வடிவ தாத்பரியத்தை கொண்டிருக்கின்றது.

Related Post

மிக நேர்த்தியான முன்புற அமைப்பில் க்ரோம் பூச்சு பெற்ற கிரில் உட்பட மிக நேர்த்தியான பம்பர் இணைக்கபட்டு, புராஜெக்டர் ஹெட்லைட் மற்றும் எல்இடி ரன்னிங் விளக்குகள் அமைந்துள்ளன.

இன்டிரியரில் இரு வண்ண கலவையிலான டேஸ்போர்டு பெற்று 8.8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே உட்பட கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் 6 மற்றும் 7 இருக்கைகளை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share

Recent Posts

ஜனவரி 24: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.88.29; டீசல் விலை ரூ.81.14

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.88.29 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.81.14 என்ற…

18 mins ago

மத்திய பட்ஜெட் 2021-22: அல்வா நிகழ்ச்சியுடன் தொடங்கியது இறுதிகட்ட பணிகள்

மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22-க்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பின் இறுதி கட்டத்தைக் குறிக்கும் அல்வா நிகழ்ச்சி இன்று மதியம் மத்திய…

18 mins ago

குறைந்தபட்ச ஆதரவு விலை; 577.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

2021 ஜனவரி 21 வரை 577.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.2020-21 காரீப் சந்தைக் காலத்தில் குறைந்தபட்ச…

18 mins ago

திறன்மிகு துறைமுகங்களாக மாற்ற தொழில்நுட்பங்கள்: மத்திய அரசு ஆலோசனை

மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகத்தின் மூன்று நாள் ஆலோசனை கூட்டம் இன்று நிறைவுற்றது. மத்திய துறைமுகம், கப்பல்…

18 mins ago

வாடிக்கையாளருக்கு வங்கி தரும் எச்சரிக்கை!

அறிமுகம் இல்லாத யாரோ ஒருவர் போன் செய்து உங்களது நம்பருக்கு ஒரு கோடி லக்கி பிரைஸ் விழுந்துள்ளது, உங்களுக்கு ஒரு…

18 mins ago

சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையா.? அப்ப இதை செய்யுங்கள்.. கண்டிப்பா கிடைக்கும்.!!

கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக எல்பிஜி…

18 mins ago