ஜோ பிடன் நிர்வாகத்தில் நிதிக்குழு தலைவராகும் இந்திய வம்சாவளி பெண்.! விரைவில் அறிவிப்பு

வாஷிங்டன்: ஜோ பிடன் நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியான நீரா தாண்டன் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க அதிபராக பிடன் பதவியேற்ற பின்னர் வெள்ளை மாளிகை அலுவலக மேலாண்மை மற்றும் நிதி குழு இயக்குநராக நீரா தாண்டன் பொறுப்பேற்பார் என்று அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. ஒரு வேளை அவர் பொறுப்பேற்றால் அமெரிக்காவின் நிதிநிலைக் குழுத் தலைவராக தலைமை ஏற்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை பெறுவார்.

இடதுசாரி சார்பு கொள்கையுடைய நீரா தாண்டன், முன்னாள் அதிபர்கள் ஒபாமா, கிளின்டன் ஆகியோரின் ஆலோசகராக இருந்தவர். பிடன் குழுவில் முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கி தலைவரான ஜேனட் எல்லன் கருவூலச் செயலாளராகவும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பொருளாதார வல்லுநர் சிசிலியா ரூஸ், பொருளாதார ஆலோசகர்கள் கவுன்சில் தலைவராக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீரா தாண்டன், எல்லன் ஆகியோரின் நியமனம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. பிடன் நிர்வாகக் குழுவில் இம்முறை அதிக பெண்கள் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

வெள்ளை மாளிகைக்கு வந்த விஷம் தடவிய கடிதம்: டிரம்புக்கு அனுப்பப்பட்டதா என விசாரணை பிரதமர் மோடி, ஜனாதிபதி கோவிந்த் ஆகியோரை அன்பாலோ செய்த அமெரிக்கா…! வெள்ளை மாளிகையில் கலவரம் : பதட்டத்தில் அமெரிக்கா

, , , , , , , , , , ,

வரலாறு காணாத ஆங்கில வில்லன் நடிகர் காலமானார் Next பிரம்மபுத்திரா ஆற்றில் சீனா கட்டும் அணையால் இந்தியாவுக்கு பாதிப்பா?

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago