டிக்டாக் செயலிக்கு குட்பை, மித்ரன் செயலிக்கு வெல்கம்: லட்சக்கணக்கான இளைஞர்களை கவர்ந்த புதிய ஆப்!

டிக்டாக் செயலிக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து அதன் ரேட்டிங்கை குறைத்து வரும் நிலையில், மித்ரன் என்ற புதிய செயலிக்கு பலரும் மாறி வருகின்றனர். இந்தியாவில் ஒரே மாதத்தில் 50 லட்சம் பேர் இந்த புதிய செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். டிக்டாக்குக்கு மாற்றாக இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

டிக்டாக்குக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது.
ஆனால் சமீப காலமாக பலரும், அதற்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். அடிக்கடி ட்விட்டரில் டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தனர். இதனையடுத்து கூகுள் பிளே ஸ்டோரில் டிக்டாக் செயலிக்கான மதிப்பீடு 1 புள்ளியாக குறைந்தது. இந்நிலையில் பலரும் இப்போது மித்ரன் செயலியை டிக்டாக்கிற்கு மாற்றாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

டிக்டாக் போல பல அம்சங்கள் இதில் இல்லை எனக் கூறப்பட்டாலும், பலரும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். கூகுள் பிளேவின் இலவச செயலிகளின் தரவரிசையில் இந்த ஆப் 7வது இடத்தில் உள்ளது. இதற்கு 4.7 மதிப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. மித்ரன் செயலியில் ஆடியோ தரம் நன்றாக இல்லை என்றும், லாகின் செய்யும் வசதிகள் சுலபமாக இல்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.

யூடியூப் மற்றும் டிக்டாக் பயன்பாட்டாளர்களுக்குள் ஏற்பட்ட மோதல் விஸ்வரூபம் எடுத்தது. டிக்டாக் செயலியைத் தடை செய்ய பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Post

மித்ரன் செயலி டவுன்லோட்

ஆண்ட்ராய்ட் போன்களில் கூகுள் பிளே ஸ்டோரில் Mithron App-ஐ இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஆனால் ஆப்பிள் பிளே ஸ்டோரில் இன்னும் இந்த செயலி இடம்பெறவில்லை. டவுன்லோடு செய்து வீடியோக்களை லாகின் செய்யாமலே பார்க்கலாம். ஆனால் வீடியோவை அப்லோட் செய்ய நிச்சயம் லாகின் செய்ய வேண்டியது கட்டாயம்.

இதையும் படிங்க: இன்றைய முக்கிய செய்திகள்

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago