Categories
தொழில்நுட்பம்

மீண்டும் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படப்பிடிப்பா?! சிம்பு தேவனின் அதிரடி விளக்கம்!!

சிம்புதேவன் இயக்கத்தில் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், உருவாக இருந்த இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நாயகனாக நடிக்க நடிகர் வடிவேலுவேஒப்பந்தம் செய்யப்பட்டார். எனவே, இதன் முதல்கட்ட படப்பிடிப்பானது சென்னையில் அரண்மனை போன்ற அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை தொடங்கினார்கள்.

அதன்பின்னர், பல்வேறு பிரச்சினைகளில் இயக்குனருடன் தகராறு ஏற்பட்டு இடையிலேயே வடிவேலு படத்திலிருந்து விலகினார். எனவே, படப்பிடிப்பு பாதியில் நின்று போய்விட்டது. இயக்குனர் ஷங்கர் இந்த பிரச்சினையை தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்று முறையிட்டார்.

அதன்பின்னர் தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால், எந்த முடிவும் ஏற்படவில்லை. இதனால், இயக்குநர் சிம்புதேவன் இந்த படத்தை அப்படியே விட்டுவிட்டு தனது அடுத்த படத்திற்கு சென்றுவிட்டார். மேலும், ஷங்கரும் ரஜினியுடன் 2.0 படத்தில் இறங்கிவிட்டார்.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், சிம்புதேவன், ” எனது அடுத்த படத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டது. ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தின் படப்பிடிப்பு முதலில் இருந்து மீண்டும் துவங்கப்படும் என நான் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply