Categories
தலைப்புச்செய்திகள் தொழில்நுட்பம்

‘அனைத்து குண்டுகளின் தாய் குண்டை’ உருவாக்கியுள்ள சீனா; கலக்கத்தில் அமெரிக்கா!

சீனா ஒரு பெரிய வெடிகுண்டு ஒன்றை உருவாக்கி உள்ளதாக அறிக்கை வெளியாகி உள்ளது. சீனாவின் இந்த ‘மதர் ஆப் ஆல் பாம்ப்ஸ்’ ஆனது அமெரிக்காவின் வெடி குண்டுகளுக்கான சரியான பதிலாக இருக்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

நல்ல செய்தி என்னவென்றால், அறிக்கை கூறும் வெடி குண்டு ஆனது மிகவு பெரியது தான் ஆனால் அது அணுவாயுதம் கிடையாது. அதாவது மிகவும் சக்திவாய்ந்த அனு அல்லாத ஆயுதம் என்று பொருள். இந்த அறிக்கை ஆனது நாட்டின் உத்தியோகபூர்வ ஊடகத்தின் வழியாக வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் மிகப்பெரிய பாதுகாப்புத் துறை நிறுவனமான நோரின்கோ (NORINCO) ஆனது, முதல் தடவையாக வான்வழி வெடிகுண்டு ஒன்றை காட்சிப்படுத்தி உள்ளதாகவும், அது தான் நாட்டின் மிகப்பெரிய அணு சக்தி இல்லாத குண்டு என்றும், அரசு நடத்தும் க்ளோபல் டைம்ஸ் அறிக்கை கூறி உள்ளது.

அணு சக்தியை கொண்டிருக்காத இந்த குண்டு, குண்டுகளின் தாய் என்று அழைக்கப்படுவதற்கு ஒரு காரணம் உள்ளது. அணு குண்டு அளவிற்கு இல்லை என்றாலும் கூட இந்த குண்டு ஆனது பெரும் பேரழிவை ஏற்படுத்தும் திறனை கொண்டு உள்ளதாம். அதனால் தான் சீனா இதை “அனைத்து வெடிகுண்டுகளின் தாய்” என்று தனது அறிக்கையில் கூறி உள்ளதாம்.

பரிசோதனை நடக்காமலா? நடந்தது.வெடி குண்டுகளை சுமந்து செல்லும் சீனாவின் எச்-6கே பாமர் மூலம் இந்த குண்டு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அந்த பரிசோதனை வெடிப்பு வை சீன நார்த் இண்டஸ்ட்ரீஸ் க்ரூப் கார்ப்பரேசன் லிமிடெட் (NORINCO) நிறுவனம், அதன் வலைத்தளத்தில் ஒரு விளம்பர வாக வெளியிட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு புதிய குண்டின் வெடிப்பு சோதனையையும் மற்றும் அதன் அழிவு சக்தியையும் சீனா வெளிப்படையாக, பொது பார்வைக்கு காட்டுவது இதுதான் முதல் முறை என்று அரசு நடத்தும் சின்ஹாவா நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, ஆப்கானிஸ்தான் போராளிகளுக்கு எதிரான போரை நடத்தியபோது, ​​அமெரிக்க இராணுவம் ஒரு ஜி.பீ.-43 / மேஸிவ் ஆர்ட்டன்ஸ் ஏர் பிளாஸ்ட் (MOAB) வெடிகுண்டை (பொதுவாக “அனைத்து குண்டுகளின் தாய்” என்று அழைக்கப்டும்) இஸ்லாமிய அரசின் மீது வீசியது குறிப்பிடத்தக்கது. சீனாவும் இந்த குண்டுக்கு அதே புனைப்பெயரைப் பயன்படுத்திக் கொண்டாலும் கூட, இதை பல டன் எடையுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் இது அமெரிக்க ஆயுதங்களை காட்டிலும் சிறிதாக மற்றும் இலகுவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

வெளியான வையும், மற்றும் குண்டு வெடிப்பின் வீச்சை வைத்து ஆராயும்போது, ​​இந்த குண்டு சுமார் ஐந்து முதல் ஆறு மீட்டர் நீளமுள்ளதாக இருக்கும். இந்த தகவலை பெய்ஜிங்கை சேர்ந்த இராணுவ ஆய்வாளர் வேய் டாங்சூ குளோபல் டைம்ஸிடம் உறுதி படுத்தி உள்ளார். “இந்த மிகப்பெரிய வெடிப்பு ஆனது மிகவும் எளிதான முறையில், முற்றிலும் வலுப்படுத்தப்பட்ட கட்டிடங்கள், கோட்டைகள் மற்றும் பாதுகாப்பு முகாம்களை கூட தரை மட்டம் ஆக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஹெலிகாப்டர்களில் செல்லும் துருப்புகளுக்கு ஒரு தரையிறங்கும் மண்டலத்தை உருவாக்கவும் இதை பயன்படுத்தலாம் என்றும், இந்த குண்டு ஆனது அமெரிக்காவின் எச் -6கே குண்டை விட சிறியது மட்டும் இலகுவானது என்றும் வேய் கூறியுள்ளார். ஒரு குண்டு வேகமாக பறந்து செல்லக்கூடியதாகவும், ஒரு போக்குவரத்து விமானத்தை விட இலக்கை மிகவும் துல்லியமாக அடைய கூடியதாகவும் இருக்க வேண்டும். அந்த திறன்களை இந்த குண்டு பெற்றுள்ளது என்பதில் ஐயமில்லை, இனி ஐயம் கொள்ள வேண்டியது அமெரிக்கா தான்.

இதற்கிடையில் அமெரிக்காவின் மதர் ஆப் பாம்ப்ஸ் வெடிகுண்டுக்கு பதில் அளிக்கும் வண்ணம், ரஷ்யா “அனைத்து குண்டுகளின் அப்பா” எனும் குண்டை உருவாக்கி வைத்து இருப்பதும், அது ஒரு பெரிய மற்றும் தெர்மோபார்சிக் வெடிகுண்டு ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் சீனாவின் புதிய குண்டு ஆனது (வில் காட்டப்பட்டுள்ள குண்டு) ஒரு தெர்மோபார்சிக் ஆயுதம் இல்லை என்று ஒரு நார்னிகோ பிரதிநிதி தெளிவு படுத்தி உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ஐந்தாவது சுதந்திர தின உரையில் “இந்திய மூவர்ண கொடியை விண்வெளிக்கு எடுத்து செல்லும்” திட்டம் ஒன்றை அறிவித்தார். அந்த திட்டமானது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய நான்காவது நாடு என்கிற பெருமையை இந்தியாவிற்கு வழங்கும் என்றும் அறிவித்தார். ஆம் இதற்கு முன் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ளது.

அந்த அறிவிப்பிற்கு பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, அதன் ‘ககன்யான்’ திட்டத்தை அறிவித்தது. இது இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பணியாகும். 16 நிமிடங்களில் என்கிற மதிப்பிடப்பட்ட காலப்பகுதியில் விண்வெளிக்குச் செல்லும் மூன்று விண்வெளி வீரர்கள், அங்கு ஒரு வாரம் தங்கி கழிக்க உள்ளார்கள்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்பியலின் தேசிய சங்கத்தின் மூத்த பொறியியலாளரும், தலைவருமான அனுஜ் சின்ஹா, ‘விஞ்ஞானிகள் சந்திப்பு’ கூட்டத்தில் பேசியபோது, ​​இந்த பணியின் சாத்தியக்கூறு குறித்து கேள்விகளை எழுப்பினார்.

அனுஜ் சின்ஹாவின் படி, இந்த திட்டத்திற்கு சுமார் 10,000 கோடி ரூபாய் திட்டம் செலவு செய்யப்பட உள்ளது. அதனால் இது முழுக்க முழுக்க “கௌரவம் மற்றும் திறமையை கட்டியெழுப்பும் ஒரு திட்டம்” தானே தவிர எந்தவொரு உடனடி நோக்கம், உள்நோக்கம் அல்லது தேவையையும் கொண்டிருக்கவில்லை என்கிறார்.

இயந்திரம் மூலம் எளிதில் செய்யக்கூடிய வேலைகளுக்கும், இடத்திற்கும் மனிதர்களை அனுப்பவேண்டிய தேவை இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிய ஆகா வேண்டிய உடனடி தேவை இல்லை, மனிதத்ர்களை அனுப்பி தான் ஆராய வேண்டும் என்கிற உள்நோக்கம் இல்லை, முக்கியமாக இது நிச்சயமாக வரையறுக்கப்பட்ட ஒரு நோக்கம் இல்லை, இந்த நிலைப்பாட்டில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதன் மூலம் மனித உயிர்களை ஆபத்திற்குள்ளாக்குவது தான் மிச்சம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த இடத்தில் சீனாவின் சமீபத்திய நிலவு பயணத்தையும் சின்ஹா குறிப்பிடுகிறார். “ஏற்கனவே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ள சீனா கூட அதன் சேன்ஜி 4 விண்கலத்தை தான் நிலவின் இருந்த பகுதியில் தரை இறக்கி உள்ளது, மனிதர்களை அல்ல” என்கிறார்.

ஒவ்வொரு நாடும் தங்கள் விண்வெளி வீரர்களை விண்வெளிக்குள் அனுப்பி வைப்பதில் முதலிடம் வகிக்க வேண்டும் என்பதையும், அதன் மூலமாக அவர்கள் தங்கள் “பங்குகளை” பெற முடியும் என்பதை தான் புரிந்து கொள்வதாக கூறிய சின்ஹா, ஒவ்வொரு நாடும் தங்கள் இடைவெளியை ஒரு விண்வெளிப் பொருளில் விட்டுவிட விரும்புகிறது என்றும், உலக நாடுகள் விண்வெளி பயணத்தை ஒரு கௌரவப் பிரச்சினையாகவும் மற்றும் திறன் வளர்த்தலாகவும் எடுத்து கொள்கின்றனர் குற்றம் சாட்டினார்.

இந்த உலகம் வாழ தகுதி அற்ற ஒரு இடமாக ,மாறும் காலத்தை மனதிற் வைத்துக்கொண்டு “கண்மூடித்தனமாக” நிகழ்த்தப்படும் விண்வெளி வளர்ச்சிகளை மட்டுமே சின்ஹா குற்றம் சாட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக அவர் ஒரு பிரதான கேள்வியை எழுப்புகிறார், “இயந்திரம் மூலம் நாம் செய்ய விரும்பும் வேலை செய்ய முடியும் என்றால், ஏன் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப வேண்டும்” என்கிறார். ஒருவேளை மனித தலையீடுகளால் மட்டுமே செய்ய கூடிய காரியம் என்றால், ஏழு நாட்கள் வரை விண்வெளி வீரர்களை விண்வெளிக்குள் தங்க வைப்பது நியாமாக இருக்கும் என்றும் சின்ஹா கூறியுள்ளார்.

வருகிற 2022 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட உள்ள ககன்யான் திட்டத்தை வைத்து முன்னேற வேண்டும் என்று அரசாங்கத்தின் முடிவு செய்து உள்ளது, தேவைப்படும் பட்சத்தில் இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சின்ஹா ஒரு வினவலுக்கு பதிலளித்தார்.

இத்தகைய திட்டங்கள் சம்பந்தப்பட்ட அபாயங்களை எடுத்துக்கூறும் முனைப்பின் கீழ், கடந்த 2003 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 ஆம் தேதி நிகழ்ந்த ஸ்பேஸ் ஷட்டில் கொலம்பியாவின் விபத்தையும், கல்பனா காலப்பன சாவ்லாவின் மரணத்தையும் சின்ஹா ​​முன்வைத்தார். நம் கையில் கால இயந்திரம் இல்லை என்பதால், வெறுமனே திறனை வளர்பதற்கும், கௌரவத்திற்காகவும் மனித உயிர்களோடு விளையாட வேண்டாம் என்று அவர் தனது உரையை முடிவு செய்தார்

source: gizbot.com

Leave a Reply